
Cinema News
Karur: எம்ஜிஆர் பாடலை மேற்கோள் காட்டி சத்யராஜ் காட்டம்! கள்ளச்சாராய சம்பவம்.. எங்க சார் போனீங்க?
Karur:
தற்போது தமிழ் நாட்டு அரசியல் களமே பரபரப்பாக இருக்கின்றது.ஒட்டுமொத்த ஆளுங்கட்சி அமைச்சர்களும் கரூரை நோக்கி படையெடுத்திருக்கின்றனர். நேற்று கரூரில் நடந்த விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். அதில் கைக்குழந்தைகளும் அடக்கம். இப்படி எந்த அரசியல் தேர்தல் பிரச்சாரத்திலும் இந்தளவு உயிர்சேதம் நடந்ததே இல்லை என்பதுதான் தகவல்.
தொடர் பிரச்சாரம்:
வரும் 2026 சட்டமன்ற தேர்தலை ஒட்டி தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்திருக்கிறார் தவெக தலைவர் விஜய். எப்படியாவது அரசியல் மாற்றம் வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வருகிறார். குறிப்பாக தற்போதுள்ள ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சித்தும் தனது பிரச்சாரத்தில் பேசி வருகிறார். திருச்சி, கடலூர், நாமக்கல், கரூர் என போற இடங்களில் எல்லாம் அந்த தொகுதி எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர்களை சாடியும் பேசி வருகிறார்.
இன்னொரு பக்கம் விஜயை பார்க்க ஏராளமான மக்கள் கூடுகின்றனர். குறிப்பாக இளம் தலைமுறையினரின் ஆதிக்கம்தான் அந்த கூட்டத்தில் தெரிகிறது. சினிமாவில் பார்த்து ரசித்த ஒருவரை நேரில் பார்க்கப் போகிறோம் என்ற ஆசையில் கூட இளசுகள் விஜய் ரசிகர்கள் என கூட்டம் கூடுகிறது. இதில் நேற்று நடந்த பரப்புரையில்தான் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கின்றது.
காலதாமதமாக வந்த விஜய்:
காலை 8.30 மணிக்கெல்லாம் நாமக்கல் வந்துவிடுவார் விஜய் என்று சொல்லப்பட்ட நிலையில் காலை 8 மணியளவில்தான் சென்னையில் இருந்தே புறப்பட்டார் விஜய். இதனால் காலை முதலே நாமக்கல்லில் அந்த கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் விஜயை பார்க்க மக்கள் நாமக்கல்லில் ஒன்று கூடி விட்டனர். மதியம் நாமக்கல்லை வந்தடைந்த விஜய் மக்களை சந்தித்து கரூர் நோக்கி புறப்பட்டார்.
கரூரில் தள்ளுமுள்ளு ஏற்பட விஜய் பேசிக் கொண்டிருக்கும் போதே ஒரு சில பேர் மயங்கி விழுந்தனர். மரத்தின் மீது ஏறவும், கூரையின் மீது ஏறவும் ரசிகர்கள் அட்டகாசமும் அதிகரித்தது. விஜய் எவ்வளவு சொல்லியும் அதை கேட்கவில்லை ரசிகர்கள். எந்தப்பக்கமும் செல்ல முடியாமல் பல பெண்கள் கூட்டத்தின் நடுவே மாட்டிக் கொண்டு தவித்துவந்தனர். இதில் சில பேருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட கரூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பத்திரிக்கையாளர்களை சந்திக்காத விஜய்:
அதில் 30க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டதாக அறிவிப்பு வெளியானது. இது அனைவருக்குமே ஒரு பேரதிர்ச்சியாக இருந்தது. இன்னொரு பக்கம் விஜய்க்கு இது பெரும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியது. உடனே அவர் சென்னைக்கு புறப்பட்டார். பத்திரிக்கையாளர்களையும் சந்திக்காமல் விமான நிலையத்திற்குள் நுழைந்தார். இதுவும் விஜய் மீது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இதை தொடர்ந்து அரசியல் கட்சித்தலைவர்கள், பிரபலங்கள் என அடுத்தடுத்து இந்த சம்பவம் குறித்து பதிவுகள் வரத் தொடங்கியது.
முதல் ஆளாக நேற்று இரவே ரஜினியிடம் இருந்து ஒரு பதிவு வந்தது. மிகுந்த வேதனையளிப்பதாக கூறினார். இன்று சத்யராஜ் எம்ஜிஆர் பாடலை மேற்கோள் காட்டி காட்டமாக பதிவிட்டிருக்கிறார். அதாவது கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். தவறு என்பது தவறி செய்வது.தப்பு என்பது தெரிந்து செய்வது. தவறு செய்தவன் திருந்த பார்க்கணும். தப்பு செய்தவன் வருந்தி ஆகணும். சிந்தித்து பார்த்தே செய்கையை மாத்து.
சிறுசா இருக்கையில் திருத்திக்கோ. தப்பு சிறுசா இருக்கையில் திருத்திக்கோ. தெரிஞ்சு தெரியாமல் நடந்திருந்தால் அது திருமபவும் வராமல் பார்த்துக்கோ. ச்சச.. என காட்டமாக வீடியோ போட்டிருக்கிறார் சத்யராஜ். இதை பார்த்த ரசிகர்கள், கள்ளச்சாராயம் குடிச்சி இறந்தாங்களே அப்போ எங்க போனீங்க? அந்த இடத்திற்கு அரசாங்கம்தான் அனுமதி கொடுத்தது. அப்போ அரசாங்கம்தான் பாதுகாப்பை உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால் தவெக தரப்பில் இருந்து கேட்கப்பட்ட இடம் வேறு. அவர்கள் அனுமதி கொடுத்த இடம் வேறு. அதனால் நடு நிலையாக இருந்து இந்த பிரச்சினையை கையாள வேண்டும் என அந்த வீடியோவில் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.