
Cinema News
Ajith: இந்தியன் சினிமாவை புரோமோட் செய்ய போகிறேன்.. அஜித்தின் பக்காவான ப்ளான்
Ajith:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். அமராவது படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அஜித் ஆரம்பத்தில் பல சவால்களை சந்தித்து வந்தார். எந்தவொரு சினிமா பின்புலமும் இல்லாமல் வந்து இன்று கோலிவுட்டிலேயே மாஸான நடிகராக வளர்ந்திருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவருடைய விடாமுயற்சியும் தன்னம்பிக்கையுமே காரணம்.
இன்று அவர் இந்தியாவிற்கே பெருமை சேர்த்திருக்கிறார். ஆம். ஸ்பெயினில் நடந்த கார் பந்தயத்தில் அஜித்தின் அணி மூன்றாம் இடத்தை பிடித்து பெருமை சேர்த்துள்ளது. 991 பிரிவில் முதன்முறையாக நடத்தப்பட்ட இந்த endurance ரேஸில் அவரது அணி மூன்றாவது இடத்தை தக்கவைத்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் ‘Spirit of the Race’ என்ற விருதும் அவரது அணிக்கு கிடைத்துள்ளன.
Dubai Autodrome-இல் நடந்த ரேஸிலும் அவரது அணி மூன்றாம் இடத்தை பிடித்தது. அவர் ஒவ்வொரு முறை பிராக்டிஸ் பண்ணும் போது அடுத்தடுத்து விபத்துக்களில் சிக்கினார். இருந்தாலும் அதிலிருந்து மீண்டு இன்று அவரது அணி வெற்றிவாகை சூடியிருக்கிறது. ஸ்பெயினில் நடந்த கார் ரேஸில் பங்கு கொள்வதற்கு முன் அஜித் அவரது மனைவி மற்றும் மகளிடம் அன்பு முத்தத்தை பெற்றுக் கொண்டுதான் போட்டியில் கலந்து கொண்டார்.
வெற்றிப் பெற்ற பிறகும் தனது குடும்பத்தை மேடையேற்றி பெருமை படுத்தினார். இது அங்கிருந்தவர்களை பெரிதும் ஈர்த்தது. இந்த நிலையில் அங்குள்ள பத்திரிக்கையாளர் அஜித்தை சந்தித்து பேட்டி எடுக்க அதில் சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்தார் அஜித். அதாவது என்னை பார்த்து தன்னுடைய ரசிகர்கள் மோட்டார் ஸ்போர்ட்ஸை பின் தொடர்ந்து விட்டனர்.
அடுத்த சீரிஸில் இருந்து இந்திய சினிமாவை புரோமோட் செய்ய திட்டமிட்டுள்ளேன். அன்பு மற்றும் நல்லெண்ணத்தின் காரணமாகத்தான் இதை என்னால் செய்ய முடிகிறது என அந்த பேட்டியில் கூறியிருக்கிறார் அஜித். தன்னுடைய படத்தையே புரோமோட் செய்யாத அஜித் இந்திய சினிமாவையே விளம்பரப்படுத்த திட்டமிட்டிருக்கிறார் என்றால் இது பாராட்டக்கூடியா விஷயமாகத்தான் பார்க்கப்படுகிறது.