
Cinema News
TVK Vijay: அரசியல் பலத்தை காட்டவே விஜய் தாமதமாக வந்தார்… போலீஸ் எஃப்ஐஆர் சொல்வது என்ன?
TVK Vijay: தவெக கட்சியின் மாவட்ட பயணத்தில் கடந்த சனிக்கிழமை கரூரில் நடந்த சந்திப்பில் 41க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருக்கும் நிலையில் நிறைய அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தமிழக அரசியலில் விஜய் நுழைந்த பின்னர் அவரின் கட்சி பலரால் கவனிக்கப்பட்டு வருகிறது. மதுரை மற்றும் விக்கிரவாண்டியில் நடந்த மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடந்தது. கிட்டத்தட்ட 10 லட்சத்துக்கும் அதிகமானோர் வந்து இருந்ததாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து வரும் சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஆரம்பத்தில் இருந்தே இந்த சுற்றுப்பயணத்துக்கு அரசு தரப்பு நிறைய பிரச்னைகள் செய்ததாக கூறப்படுகிறது.
விஜயும் இந்த கட்சியின் பயணத்திற்கு குழந்தைகள், வயதானவர்கள் வர வேண்டாம் எனவும் கோரிக்கை வைத்தனர். ஆனால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத மக்கள் தங்களுடைய குழந்தைகளுடன் சந்திப்பில் விஜயை பார்க்க கூட்டம் கூட்டமாக வந்தனர்.
அதே நேரத்தில் கூட்டம் நெரிசலான இடத்தில் தொடர்ந்து நடந்து வருவதால் எதுவும் அசம்பாவிதம் நடக்கும் என சவுக்கு சங்கர் சமீபத்தில் கணித்து இருந்தார். அதே போல இந்த வாரம் கரூரில் நடந்த கூட்டத்தின் போது பிரச்னை ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்து இருக்கின்றனர்.
இதுகுறித்து பல்வேறு கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றது. கூட்டத்தில் பார்த்தவர்கள் சொல்லும் கருத்தின்படி ஜாமர் வைக்கப்பட்டதாகவும், பலருக்கு கத்தி கிழி இருந்ததாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கிறது.
இருந்தும் விஜயிற்கு பல கட்சி தலைவர்கள் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் போலீஸ் தரப்பு இந்த சம்பவம் தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அந்த எஃப்ஐஆரில், விஜய் தன்னுடைய அரசியல் பலத்தை காட்டவே 4 மணி நேரம் தாமதமாக வந்தார்.

ரசிகர்கள் மரம், கடை கொட்டகைகளில் ஏறி உட்கார்ந்து இருந்தனர். பல இடங்களில் கொடுக்கப்பட்ட நிபந்தனைகள் மீறப்பட்டது. தவெக நிர்வாகிகளும் இதை கண்டுக்கொள்ளவே இல்லை. அசாதாரண சூழலை எடுத்து சொல்லியும் தவெக நிர்வாகி நிர்மல் குமார் கேட்கவில்லை.
இதனால் 2வது குற்றவாளியாக ஆனந்த், மூன்றாவது குற்றவாளியாக நிர்மல் குமார் சேர்க்கப்பட்டுள்ளனர். இதே போல நாமக்கல் பயணத்திலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு மூச்சு திணறல் பிரச்னை இருப்பதாக காவல் அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் எஃப்ஐஆர் அங்கும் போடப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.