
Cinema News
Vijay: CM சார் என்னை என்ன வேணுனாலும் பண்ணுங்க.. வீடியோ வெளியிட்டு வலியை பகிர்ந்த விஜய்
Vijay:
கரூர் சம்பவத்திற்கு பிறகு முதன் முறையாக விஜய் ஒரு வீடியோவை வெளியிட்டு அவருடைய வலியை பகிர்ந்திருக்கிறார். இதோ அவர் பேசியது: அனைவருக்கும் வணக்கம். என் வாழ்க்கையில் இப்படியொரு வலியை பார்த்ததே கிடையாது. மனசு முழுவதும் வலிகளோடு இருக்கிறேன். வலி மட்டும்தான். என்னுடைய சுற்றுப்பயணத்தில் என்னுடைய மக்கள் பார்க்க வருகிறார்கள். அதற்கு ஒரே ஒரு காரணம் அவங்க என் மேல் வைத்த அன்பும் பாசமும்.மக்கள் என் மேல் வைத்திருக்கும் அன்பிற்கும் பாசத்திற்கும் நான் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன்.
இந்த சுற்றுப்பயணத்தில் மற்ற எல்லா விஷயங்களையும் தாண்டி மக்களின் பாதுகாப்பு மிஸ் யூஸ் பண்ணிரக்கூடாது அப்படிங்கிறதுக்காகத்தான் என் மனசு எப்போதும் அவர்களின் பாதுகாப்பை பற்றித்தான் ஆழமாக இருக்கும். அதனால்தான் இந்த அரசியல் காரணங்கள் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு மக்களின் பாதுகாப்பை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு அதற்கான இடங்களை தேர்வு செய்வது, அவர்களுக்கு தேவையான ப்ரோவிஷன்களை தேர்ந்தெடுப்பது காவல்துறையில் நாங்க மிகவும் பணிவுடன் அனுமதி கேட்போம்.
ஆனால் நடக்கக் கூடாது நடந்திருச்சு. நானும் மனுஷன்தானே. அந்த மாதிரி நடந்திருக்கும் போது எப்படி என்னால அங்கு இருந்து வர முடியும். நான் திரும்ப அங்க போகனும்னு இருந்துச்சுனா அதையும் காரணம் காட்டி அங்கு இருந்த பதற்றமான சூழ்நிலை, வேறு எதுவும் அசாம்பாவிதம் நடந்துவிடக் கூடாதுனுதான் நான் அதை தவிர்த்தேன். அங்கு சொந்தங்களை இழந்த குடும்பங்களை நான் சந்திக்கும் போதும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை சொன்னாலும் அது எதற்கும் ஈடு இணையாகாது என்று எனக்கு தெரியும்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் சீக்கிரம் வீடு திரும்ப வேண்டும் என நான் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். கூடிய சீக்கிரம் உங்க எல்லாரையும் சந்திக்கிறேன். இந்த நேரத்தில் எங்களுடைய வலிகளை சூழ் நிலைகளை புரிந்து எங்களுக்காக பேசிய அரசியல் கட்சி தலைவர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கிட்டத்தட்ட 5 மாவட்டங்களுக்கு பிரச்சாரத்திற்கு போனோம். எங்கயும் இப்படி நடக்கல. கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது என தெரியவில்லை, மக்களுக்கு எல்லாமே தெரியும். அவர்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கரூர் மக்கள் உண்மையை எங்களுக்காக சொல்லும் போது அந்த கடவுளே வந்து சொன்ன மாதிரி இருந்துச்சு. உண்மைகள் கூடிய சீக்கிரம் வெளியே வரும்.
எங்களுக்கு தரப்பட்ட இடத்தில் நாங்கள் போய் பேசிக் கொண்டிருந்தோம். அதை தவிர வேறெந்த தவறும் நாங்க செய்யவில்லை. அதைவிட்டு எங்கள் நிர்வாகிகள், தொண்டர்கள் என அவங்கள போய் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். சோசியல் மீடிய நண்பர்களை பிடிக்கிறார்கள். சிஎம் சார், உங்களுக்கு பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்துச்சுனா என்னை எதாவது பண்ணுங்க.
தயவு செய்து மக்களை விட்டுருங்க. நான் என்னுடைய அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோதான் இருப்பேன். நண்பர்களே தோழர்களே நம்முடைய அரசியல் பயணம் இன்னும் ஸ்டராங்கா இன்னும் தைரியத்தோட தொடரும். நன்றி என அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.
இதோ அந்த வீடியோ லிங்க: https://www.instagram.com/reel/DPOPxpGDlCT/?igsh=bGR1d2N5OTJ5a3A5