Connect with us
tvk vijay

Cinema News

தவெக வளர்வது தமிழ்நாட்டிற்கு ஆபத்து.. கரூர் சம்பவத்திற்கு விஜய் பொறுப்பேற்காது ஏன்?

TVK VIJAY :

  • தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற பரபரப்பாக செயல்பட்டு வருகிறார். தனது இரண்டு மாநில மாநாட்டை வெற்றிகரமாக முடித்த விஜய் தற்போது மாவட்ட வாரியாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
  • வாரந்தோறும் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அதன்படி கடந்த வாரம் விஜய் கரூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது அவரைக் காண வந்த ரசிகர் கூட்டங்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கூட்ட நெரிசலில் சிறியவர் முதல் பெரியவர் வரை சுமார் 40 பேர் பலியாகினர்.
  • இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. பல அரசியல் கட்சி தலைவர்களும் அப்பாவி மக்கள் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் விஜயை பந்தாடி வருகின்றனர். விஜயும் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தது மட்டுமின்றி அவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக 20 லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்திருந்தார்.
  • இந்நிலையில் மூத்த பத்திரிகையாளர் மணி விஜய் மீது கடுமையாக சாடியுள்ளார். அதில் “இந்தக் கரூர் சம்பவம் விஜயின் அரசியல் வாழ்க்கையை முடிக்க போகிறது. இதுவரை இந்த சம்பவம் குறித்து விஜய் வாய் கூட கேட்கவில்லை. அதுமட்டுமில்லை நடந்த இந்த கோர சம்பவத்திற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று விஜய் இதுவரை ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை.”

”இப்படி ஒரு அடிப்படை நேர்மை கூட விஜயிடம் இல்லை. அவர் மட்டுமல்ல அந்தக் கட்சியில் இருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்கள் கூட மருத்துவமனையில் இருப்பவர்களை சந்திக்க செல்லவில்லை. சொல்லப்போனால் தமிழக வெற்றிக் கழகம் ஒரு கட்சியே கிடையாது. அது ஒரு முட்டாள் ரசிகர்கள் கூட்டம். போலீஸ் அந்த இடத்திற்கு அனுமதி கொடுத்தது தப்பு”.

விஜய் தமிழ்நாட்டிற்கு பேராபத்து :

”பத்திரிக்கை துறையில் என்னுடைய 40 ஆண்டுகால அனுபவத்தில் transformer-ல் ஏறி நின்று பார்த்தவர்களை நான் பார்த்ததே இல்லை. இந்த மாதிரி ரசிகர்கள் ஏறி நின்றால் அரசாங்கம் என்ன செய்யும்? என்னதான் செய்ய முடியும்? கட்சி அடிமட்டத்திலேயே தப்பாக இருக்கிறது. இவர்கள் தமிழகத்திற்கு alternative கட்சியும் கிடையாது. இவர்கள் வளர்வது தமிழ்நாட்டிற்கு நல்லதும் கிடையாது”.

தமிழக அரசியலின் அசிங்கம் தவெக :

”எந்தவிதமான norms-ம் இவர்களிடம் கிடையாது. என்னை பொறுத்தவரை தமிழக அரசியல் இருந்து அகற்றப்பட வேண்டிய ஒரு காட்சிதான் தவெக. 1998-ல் ஜெயலலிதாவை பற்றி சொன்ன வாசகம் தான் ஞாபகத்துக்கு வருகிறது அது என்னவென்றால் ’தமிழக அரசியலில் இருந்து அகற்றப்பட வேண்டிய அசிங்கம்’ தான் தவெக. இதுவரை விஜய் எந்த பொறுப்பும் ஏற்க்கவில்லை அவ்வளவு கல்நெஞ்சக்காரராக இருக்கிறார்”.

”இந்த இடத்தில் கண்டிப்பாக நான் முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் வார்த்தையை ஏற்றுக் கொள்கிறேன். அதாவது கரூர் எஸ்பி மற்றும் கலெக்டரை suspend செய்ய வேண்டும். ஏனென்றால் இந்த விஷயத்தில் அரசாங்கத்திற்கும் ஒரு பங்கு இருக்கிறது. ஆனால் முதல் குற்றவாளி விஜய்தான்”. என்று விஜய்யை கடுமையாக விளாசியுள்ளார்.

author avatar
SATHISH G
சதீஷ் பி.இ. பட்டதாரியான இவர் 3 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 2 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top