Connect with us
rajini - lokesh

Cinema News

No சொன்ன ரஜினி .. கடும் மன உளைச்சலில் லோகேஷ்.. கூலி வைத்த ஆப்புதான் காரணமா?

ரஜினி கமல் காம்போ :

இந்திய சினிமாவின் அடையாளமாக விளங்குபவர்கள் ரஜினி மற்றும் கமல். 80-களின் காலகட்டத்தில் இருவரும் சேர்ந்து நடிக்க சுமார் பத்து படங்களுக்கு மேல் நடித்து ரசிகர்களை entertain செய்தனர். அதன் பிறகு தனித்தனி track-ல் பயணம் செய்து ரஜினி மற்றும் கமல் இருவரும் இன்று வரை தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும் இணைந்து நடித்து சுமார் 46 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் மீண்டும் ரஜினி-கமல் காம்போ மீண்டும் இணைய போவதாக கமலஹாசன் சைமா விருது வழங்கும் விழாவில் வெளிப்படையாக சொல்லிவிட்டார். கமல் officially confirm செய்தவுடன் ரசிகர்களும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த படத்திற்கான சவால் என்னவென்றால் இந்த மாபெரும் நடிப்பு ஜாம்பவான்களை இயக்குவது யார் என்பதுதான். இன்று தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் இயக்குனராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் ரஜினி, கமல் படத்தை இயக்குவார் என்று கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வந்தது.

லோகேஷுக்கு no சொன்ன ரஜினி :

ஆனால் சமீபத்தில் ஏர்போர்ட்டில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ரஜினி இந்த படத்திற்கான கதை மற்றும் இயக்குனர் இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறியிருந்தார். பொதுவாக ரஜினி எப்போதும் வெளிப்படையாக பேசும் தன்மை கொண்டவர். அப்படி இருக்கும் பட்சத்தில் லோகேஷ் இந்த படத்தில் இல்லை என்று ரஜினியே இப்படி ஓப்பனாக சொல்லிவிட்டாரே என்று ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மன உளைச்சலில் லோகேஷ் :

  • இதனால் லோகேஷும் கவலை அடைந்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் சினிமா விமர்சகர் வலைப்பேச்சு அந்தணன் கூறி இருக்கிறார். மேலும் அதில்,”கூலி வெற்றியா..? தோல்வியா..? என்பது எல்லாம் வேற ஆனால் அந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் cut செய்து எடுத்து troll செய்ய ஆரம்பித்து விட்டனர்”.
  • “இந்த சம்பவம் லோகேஷை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. அதனால்தான் இந்த முறை யாருமே குறை சொல்ல முடியாத அளவிற்கு படத்தை எடுத்து விட வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறார் லோகேஷ்.
  • கமலும் ஒரு நல்ல கதை கொண்டு வர சொல்லியிருக்கிறார். அதனால்தான் சிறிது காலம் சோசியல் மீடியாவில் இருந்து ஒதுங்கி எந்தவித தொந்தரவும் இன்றி தனியாக ரூம் போட்டு கதை எழுதுவதில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்”.
  • ”கதை ஒழுங்காக வரும் பட்சத்தில் கமல், ரஜினியை எப்படியும் சம்மதிக்க வைத்து விடுவார். இருந்தாலும் கடைசி நேரத்தில் சினிமாவில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஜெயலர்-2 வெளியான பிறகு என்னதான் நடக்கிறது என்பதை பார்க்கலாம். என்று கூறியுள்ளார்.
author avatar
SATHISH G
சதீஷ் பி.இ. பட்டதாரியான இவர் 3 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 2 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top