
latest news
விஜய் இதை செய்யாத வரை தவெக விளங்காது!.. போட்டு பொளந்த பிரபலம்!…
TVK Vijay: நடிகரும், தவெக தலைவருமான விஜய் கடந்த 27ம் தேதி பிரச்சாரத்திற்கு சென்றிருந்தபோது அவரை பார்க்க கூடிய மக்கள் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு 41 பேர் வரை உயிரிழந்தனர். இதையடுத்து ‘ விஜயும், அவரின் ரசிகர்களும், கட்சி தொண்டர்களும் போலீசார் சொன்ன விதிமுறைகளை பின்பற்றவில்லை. அதைவிட முக்கியமாக இன்னுமும் விஜய் தன் தவறை ஒப்புக் கொள்ளவில்லை’ என்றெல்லாம் திமுகவினர் பேசி வருகிறார்கள்.
தவெகவினரும், விஜய் ரசிகர்களும் ‘இதில் விஜய் மீது தவறு இல்லை. போலீசார் சரியான பாதுகாப்பு கொடுக்கவில்லை. கூட்டத்தில் ஆம்புலன்ஸ் விட்டும், சிலர் உள்ளே புகுந்து நெரிசலை வேண்டுமென்றே ஏற்படுத்தியும் மக்களை கீழே தள்ளியதில்தான் இவ்வளவு உயிரிழப்புகள் ஏற்பட்டது’ என கூறி வருகிறார்கள். இது தொடர்பாக தவெக நிர்வாகிகள் 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களாக இது பற்றி எந்த கருத்தும் தெரிவிக்காமல் மௌனமாக இருந்த விஜய் நேற்று ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் ‘அரசியலை தாண்டி மக்களின் பாதுகாப்பு முக்கியம் என்று நான் எப்போதும் நினைப்பேன். இதுவரைக்கும் 5 இடங்களில் நாங்கள் கூட்டம் போட்டிருக்கிறோம். ஆனால் கரூரில் மட்டுமே இப்படி நடந்திருக்கிறது. இது யாரால் நடந்தது என்பது மக்களுக்கு தெரியும்.
விரைவில் உண்மை வெளியே. என்னை பழிவாங்க வேண்டுமென்றால் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் என் கட்சி நிர்வாகிகளை எதுவும் செய்ய வேண்டாம்’ என பேசி இருந்தார். இதையடுத்து ‘விஜய் திருந்தவில்லை’ என திமுகவினர் குற்றம் சொல்லி வருகிறார்கள். இந்நிலையில் பிரபல சினிமா விமர்சகர் புளூசட்ட மாறன் தனது எக்ஸ தளத்தில் விஜய் செய்த தவறுகள் என சில பட்டியல்களை போட்டிருக்கிறார்.
- மரங்கள், மின்சார கம்பிகள், கட்டிடங்கள் என எல்லாவற்றிலும் ஏறும் ரசிகர்களை கட்டுப்படுத்துவதில் தொடர்ந்து தோற்பது…
- விழுப்புரம் மாநாடு நடந்த போது உயிரிழந்த தொண்டர்களின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் சொல்லாதது.
- மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்காமல் அவர்களை பனையூர் அலுவலகத்திற்கு வர வைத்தது.
- ஊடகங்களையும், செய்தியார்களையும் சந்திக்காமல் தொடர்ந்து தவிர்த்து வருவது.
- அரசியல் தெரியாத, அனுபவமில்லாத நபர்களை ஆலோசகர்களாக வைத்திருப்பது.
- தவெகவில் இருப்பவர்களில் 95 சதவீதம் பேர் ரசிகர்களாக மட்டுமே இருக்கிறார்கள். அவர்கள் பொறுப்புள்ள தொண்டர்களாக மாறவில்லை என்பதை உணராமல் இருப்பது.
இவற்றுக்கெல்லாம் முன்மாதிரியாக..
- கோயம்பேடு ரோகிணி தியேட்டரில் இருக்கைகள் அனைத்தையும் உங்கள் ரசிகர்கள் நாசம் செய்தபோது அதை கண்டிக்காமல் அமைதியாக இருந்ததோடு அந்த பாதிப்பிற்கு நஷ்ட ஈடும் கொடுக்காமல் இருந்தது.
- FDFS நள்ளிரவு காட்சிகளின்போது அசம்பாவிதம் நடக்கும் என்பதை உணர்ந்து தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களிடம் பேசி காலைக்காட்சிகள் மட்டுமே போதுமென சொல்லாமல் இருப்பது.
- என் ரசிகர்கள் யாரும் பிளாக்கில் டிக்கட் வாங்க வேண்டாம். அரசு நிர்ணயித்த டிக்கெட் விலையில் மட்டுமே வாங்குங்கள் என சொல்லாமல் இருப்பது.
- இதுபோன்ற எந்த விதிமீறல்களுக்கும் ஒரு கண்டனம் கூற தெரிவிக்காமலும், ரசிகர்களை முறைப்படுத்தாமலும் வேடிக்கை பார்த்ததன் விளைவு அரசியல் கட்சி துவங்கிய பின் அனுபவிக்க வேண்டியிருக்கிறது..
‘ இன்னும் ஸ்ட்ராங்-ஆக நம் அரசியல் பயணம் தொடரும்’ என உங்கள் ரசிகர்களுக்கு கூறியிருக்கிறீர்கள். ஆனல், அவர்களை ஒழுங்குபடுத்தாதவரை தவெக எனும் தேர் முன்னோக்கி நகர வாய்ப்பே இல்லை’ என பதிவிட்டிருக்கிறார்.