
Cinema News
Nayanthara: ஆனானப்பட்ட கார்த்திக்கையே சமாளிச்சவரு! நயன்தாராவை சமாளிக்க சுந்தர் சியின் மாஸ்டர் ப்ளான்
Nayanthara:
கடந்த 2020 ஆம் ஆண்டு ஆர் ஜே பாலாஜி இயக்கி நடித்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. தற்கால அம்மன் எப்படி எல்லாம் இருப்பார் என்னவெல்லாம் யோசிப்பார் என்பதை அடிப்படையாக வைத்து அந்த படத்தை மிகவும் காமெடியாக எடுத்து இருந்தார் ஆர் ஜே பாலாஜி. மூக்குத்தி அம்மன் படம் மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து அதனுடைய இரண்டாம் பாகம் இப்போது தயாராகி வருகிறது. இந்தப் படத்தை சுந்தர் சி இயக்கி வருகிறார்.
படத்தின் பட்ஜெட்:
முதலில் ஆர்.ஜே பாலாஜி தான் இந்த படத்தை இயக்குவதாக இருந்தது. படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேசுக்கும் ஆர் ஜே பாலாஜிக்கும் ஏற்பட்ட சில முரண்பாடுகளால் ஆர்.ஜே பாலாஜி அந்த படத்தில் இருந்து விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. படத்தின் பட்ஜெட் சுமார் 100 கோடி என்று கூறப்படுகிறது. நயன்தாரா இந்த படத்தில் இரு வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் ஒரு தகவல் கிடைத்துள்ளது. நயன்தாராவுடன் இணைந்து ஊர்வசி, துனியா விஜயன் ,ரெஜினா, யோகி பாபு ,அபிநயா போன்ற பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். துனியா விஜயன் இந்த படத்தில் வில்லி படத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது.
படப்பிடிப்பது துவங்கிய நாளிலிருந்து ஏகப்பட்ட விவாதம் இந்த படத்தின் மீது இருந்தது. அதாவது நயன்தாரா உதவி இயக்குனர் ஒருவருடன் உடன்பாடு இல்லாமல் போனது, சுந்தர் சிக்கும் நயன்தாராவுக்கும் இடையே செட்டாகாமல் போனது என சில காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. அதன் பிறகு ஐசரி கணேஷ் இந்த விவகாரத்தில் தலையிட்டு மீண்டும் சுமூக நிலைக்கு கொண்டு வந்தார். இந்த படத்திற்காக நயன்தாரா விரதம் இருந்து வருவதாகவும் சொல்லப்பட்டது .அம்மன் வேடத்தில் நடிப்பதால் விரதம் இருந்து இந்த படத்தில் நடித்தார் என கூறப்பட்டது.
நயனுக்கு பதில் டூப்:
இதனுடைய ரிலீஸ் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது . இந்த நிலையில் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தை பற்றி சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. அதாவது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வரும் சூழலில் படம் தொடங்கியதிலிருந்து நயன்தாராவால் கொஞ்சம் ஜெர்க்காகி தான் இருந்தார் சுந்தர்சி. ஒரு கட்டத்தில் நயன்தாராவிற்கு பதில் வேறொரு நடிகையை நடிக்க விடலாமா என்று கூட யோசித்தார்.
ஆனால் நயன்தாராவை நம்பி பல கோடிகளை முதலீடு செய்த ஐசரி கணேஷ் அதற்கு உடன்படவில்லை. அதன் பிறகு சுதாரித்துக்கொண்ட சுந்தர்சி நயன்தாராவை தன்னுடைய அனுபவத்தின் அடிப்படையில் டீல் செய்ய ஆரம்பித்தார். படப்பிடிப்பிற்கு பல வகைகளில் டிமிக்கி கொடுத்த கார்த்திகையே அசால்ட் ஆக டீல் செய்தவர் சுந்தர்சி . அதன் அடிப்படையில் ஒரு நாள் கால்ஷீட் ஆக 5 மணி நேரம்தான் நயன்தாரா படப்பிடிப்பில் கலந்து கொள்வாராம்.
சரியான டீல்:
அதற்கு ஏற்ற வகையில் எப்பொழுதும் நயன்தாராவின் டூப் ஒருவர் இருக்கும்படி வைத்துக் கொண்டாராம் சுந்தர்சி. நயன்தாரா இல்லாத போது அந்த டூப்பை பெரும்பாலான காட்சிகளில் பயன்படுத்திக் கொண்டாராம். மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாராவின் குளோசப் காட்சிகள் மற்றும் அவர் முகம் தெரிகிற மாதிரியான காட்சிகளில் மட்டும்தான் நயன் நடித்திருக்கிறாராம். மற்ற காட்சிகளான லாங் ஷாட் ,பின்புற காட்சிகள் எல்லாம் நடித்தது நயன்தாராவின் டூப் என சமூக வலைதளங்களில் இப்படி ஒரு செய்தி பரவி வருகிறது.