Connect with us
idli kadai

Box Office

Idli kadai: பாசிட்டிவ் ரிவ்யூ வந்தும் முதல் நாள் வசூல் இவ்வளவுதானா?.. அட பாவமே!….

கோலிவுட்டில் முக்கிய நடிகர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் தனுஷ். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பேன் இண்டியா நடிகராக வலம் வருவதோடு மட்டுமில்லாமல் ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். அண்ணன் செல்வராகவனிடம் சினிமா கற்றுக்கொண்டாலும் அதன்பின் பல இயக்குனர்களின் படங்களில் நடித்து தன்னை மெருகேற்றிக்கொண்டார். பவர் பாண்டி படம் மூலம் இயக்குனராக மாறினார். ராயன் படத்தையும் இயக்கி நடித்திருந்தார்.

தற்போது இட்லி கடை எனும் ஃபீல் குட் படத்தை கொடுத்திருக்கிறார். இந்த திரைப்படம் நேற்று வெளியானது. ஹீரோவுக்கான பில்டப் இல்லாமல், பன்ச் வசனம் பேசாமல், ரசிக்கத்தக்க ஒரு நல்ல கதையை இயக்கி ரசிகர்களுக்கு இட்லி விருந்து வைத்திருக்கிறார். நேற்று காலை முதல் காட்சி வெளியானதும் படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் வர துவங்கியது. அப்பாவை மதிக்க வேண்டும், சொந்த ஊரை விட்டு போகக்கூடாது, குல தொழிலை விட்டுவிடக்கூடாது, அதுவே மன நிம்மதி என படத்தில் பேசியிருக்கிறார் தனுஷ்.

ஜிவி பிரகாஷின் இசையும், பின்னணி இசையும் ரசிகர்களை மிகவும் கவர்ந்திருக்கிறது. இப்படி பாசிட்டிவான விமர்சனங்கள் வந்தாலும் ஒருபக்கம் கமர்ஷியல் மசாலா படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு இப்படம் பிடிக்கவில்லை. படம் போர், முதல் பாதி வேஸ்ட். இரண்டாம் பாதி சரியில்லை என்றெல்லாம் பேஸ்புக், டிவிட்டர் ஆகியவற்றில் சொல்லி வருகிறார்கள்.

படத்தின் தலைப்பு, ஆக்‌ஷன் படங்களை பார்த்து மாறிப்போன ரசிகர்களின் மனநிலை, கரூர் சம்பவத்தின் பாதிப்பு போன்ற காரணங்களால் இப்படத்திற்கு கூட்டம் இல்லை என சொல்லப்பட்டுகிறது. அதேநேரம், நேர்மறையான விமர்சனங்கள் அதிகரித்து வருவதால் இன்றிலிருந்து வசூல் அதிகரிக்கும் எனவும் சொல்கிறார்கள். இந்நிலையில், இட்லி கடை முதல் நாளான நேற்று இந்தியாவில் 10.50 கோடி மட்டுமே வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Box Office

To Top