
Cinema News
தனுஷுக்கும் எனக்கும் பல வருஷமா பிரச்சனை!.. பார்த்திபன் இப்படி ஓப்பனா பேசிட்டாரே!…
Idli kadai: பாக்கியராஜின் உதவியாளரான பார்த்திபன் புதிய பாதை என்கிற திரைப்படம் மூலம் இயக்குனர் மற்றும் நடிகராக அறிமுகமானார். முதல் படத்திலேயே தேசிய விருதும் வாங்கினார். வித்தியாசமான கதைகள், வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பது பார்த்திபனின் வழக்கம். பல புதிய முயற்சிகளை, பரிசோதனை முயற்சிகளை இவர் தனது படங்களில் செய்து பார்த்திருக்கிறார். அவற்றில் தோல்விகளை கண்டாலும் அவர் தூண்டு போகாமல் பினிக்ஸ் பறவை போல மீண்டும் மீண்டும் பரிசோதனை முயற்சிகளை செய்து பார்த்துக்கொண்டு இருக்கிறார்.
தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக பார்த்திபன் நடித்திருக்கிறார். இந்த படம் நேற்று வெளியான நிலையில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பார்த்திபன் ‘எனக்கும் தனுஷுக்கும் நீண்ட நாள் பழக்கம் மட்டுமல்ல.. நீண்ட கால உரசலும் இருக்கிறது.. ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் அந்த மன்னன் வேபடத்தில் தனுஷ் நடிப்பதாக இருந்தது. ஆனால் நான் நடித்தேன்.

அதேபோல் வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் படத்தில் முதலில் நான்தான் ஹீரோவாக நடிக்க வேண்டியது. ஆனால் தனுஷ் நடித்தார். அதேபோல் வெற்றிமாறன் இயக்கிய சூதாடி படம் 5 நாட்கள் ஷூட்டிங் நடந்து நின்று போய் விட்டது. இப்படி எனக்கும் தனுஷுக்கும் சில உரசல்கள் இருந்தது. இது எல்லாவற்றையும் ஈடு கட்டுவது போல இட்லி கடை படத்தில் நடிக்கும்படி தனுஷ் என்னை கேட்ட போது நான் ஒப்புக் கொண்டேன்.
எனது கதாபாத்திரம் சின்னதாக இருந்தாலும் அதன் முடிவு நன்றாகவே இருந்தது. என்னை ரசிகர்கள் வில்லனாக பார்ப்பதில்லை. நானும் ரவுடிதான் படத்தில் நான் வில்லனாக இருந்தாலும் ரசிகர்கள் என்னை அப்படி பார்ப்பதில்லை. அதனால்தான் அந்த படத்தில் என்னை ரசிகர்கள் ரசித்தார்கள். மக்கள் மத்தியில் என் மீது அப்படி ஒரு நல்ல அபிப்ராயம் இருக்கிறது. அதுதான் இட்லி கடை படத்திலும் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. தியேட்டரில் கைத்தட்டிலும் கிடைத்தது’ என பேசி இருக்கிறார்.