
latest news
சோலியை முடிச்சிட்டாங்களே… காந்தாரா சேப்டர் 1 படத்தைப் பொளந்து கட்டிய புளூசட்டை மாறன்!
காந்தாரா சேப்டர் 1 படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கியுள்ளார். இந்தப் படத்தோட விமர்சனம் குறித்து பிரபல யூடியூபர் புளூசட்டை மாறன் என்ன சொல்றாருன்னு பாருங்க.
காந்தாரா படத்தோட ப்ரீக்குவல் தான் இந்தப் படம். காந்தாராவை சமகாலத்துல நடந்த கதை மாதிரி காட்டிருப்பாங்க. ஆனா இந்தப் படம் 100, 200 வருஷத்துக்கு முன்னாடி கிரேக், போர்ச்சுக்கல்ல இருந்து இந்தியாவுக்கு வந்து மிளகு மற்றும் வாசனைத் திரவியங்களை வாங்கிப் போறாங்க. ஈஸ்வரப் பூந்தோட்டம் என்ற பகுதியில் இதுபோன்ற மிளகு, வாசனைத் திரவியங்கள் எல்லாம் கிடைக்குது. அந்த ஏரியாவையே ஆட்டையைப் போட்டுறணும்.
2 இனக்குழுக்களும், ஒரு ராஜாவும் பிளான் போடுறாங்க. இதுக்கு இன்னொரு காரணம் அங்கே ஒரு தெய்வீகமான விஷயம் இருக்கு. அதனால அந்த ஏரியாவைக் கையகப்படுத்த நினைக்கிறாங்க. ஒரு கட்டத்துல போர் தொடுக்குறாங்க. அந்தப் பகுதியில் உள்ள தெய்வம் அந்த மக்களைக் காப்பாத்துதா இல்லையாங்கறதுதான் கதை.
காந்தாரா 1 படத்தைப் பொருத்த வரை கிளைமேக்ஸ்ல தெய்வத்தைக் காட்டுறாங்க. கடவுள் நம்பிக்கை இல்லாதவன் கூட அதை நம்புற மாதிரி காட்டுறாங்க. ஆனா இந்தப் படத்துல ஃபேன்டஸியா காட்டுறேன்னு செயற்கையா காட்டுறாங்க. அப்படி ஒரு புலி வருது. குதிரை, பன்னி, தேவாங்கு பைட்னு எல்லாமே வருது. ஆனா அது ஏன் வருதுன்னுதான் தெரியல. முதல் பாதியைக் கடக்குறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிப்போச்சு.

செகண்ட் ஆஃப்ல தான் கதையே ஆரம்பிக்குது. ஹீரோவுக்கு சாமி வருது. படத்தோட ப்ரீ கிளைமாக்ஸ்ல ஒரு விஷயத்தை வச்சிருக்காங்க. அதுல இருந்துதான் படம் சூடுபிடிக்குது. காந்தாரா 1 படத்து கிளைமாக்ஸ்ல கடவுள் நம்பிக்கையே இல்லாதவங்களுக்கும் கூட பிடிக்கிற மாதிரி சீனை எடுத்தாங்க.
அதுல சத்தம் வரும் போது முதல்ல பயம் வரும். அடுத்து சிரிப்பு வரும். ஆனா இதுலயும் அதையே தான் எடுத்து வச்சிருக்காங்க. தீவிரமான பக்தர்களுக்கு இது ஓகே. ஆனா மத்தவங்களால இதை தாங்கிக் கொள்ள முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.