Connect with us
vijay (8)

Cinema News

Vijay: விஜய் பாலிசி இதுதான்.. மாத்திக்கவே மாட்டாரு! கடைசில என்னாச்சு?

Vijay:

தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது அவர் ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் தான் விஜய்க்கு கடைசி படமாகவும் இருக்கும். எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ஜன நாயகன் திரைப்படம் அரசியல் ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

கடைசி படம் என்பதால் அரசியல் ரீதியாக பல வசனங்கள் இந்தப் படத்தில் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சும்மாவே போகும் கூட்டத்தில் எல்லாம் சரமாரியாக ஆளுங்கட்சியையும் எதிர்கட்சியையும் மத்தியில் ஆளும் கட்சியையும் விமர்சித்து வரும் விஜய் படத்தில் பேசாமல் இருந்திருப்பாரா என்றும் கூறி வருகிறார்கள். சமீபத்தில் கரூரில் ஏற்பட்ட அந்த விபத்து விஜய்க்கு ஒரு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

கிட்டத்தட்ட 41 பேர் உயிரிழந்திருக்கின்றனர். அதற்கு விஜய் கண்டிப்பாக பதில் சொல்லியே ஆகவேண்டும் என ஒரு சில பேர் குற்றம் சாட்டி வருகின்றனர். இது அரசியல் களத்தில் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. அடுத்து என்ன நடக்க போகிறது என்ற சூழ் நிலையில் தான் தமிழக அரசியல் களம் தற்போது இருந்து வருகிறது. இதற்கு மத்தியில் கரூர் நீதிமன்றம் இன்னும் ஒரு வார காலத்தில் தமிழக அரசும் விஜய் தரப்பும் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என உத்தரவிட்டிருக்கின்றது.

அரசியலில் மட்டுமில்லாமல் சினிமாவிலும் ஒரு பெரும் ஆளுமையாகவே பார்க்கப்படுகிறார் விஜய். நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் தொடங்கிய சினிமா பயணத்தை இன்று வரை வெற்றிகரமாக பயணித்து வருகிறார். ஆரம்பத்தில் இவர் மீது கடுமையாக விமர்சனம் எழுந்தது. உருவ கேலியும் செய்தனர். ஆனாலும் அதை ஒரு பாடமாக எடுத்து கொண்டு போராடி இன்று இந்த நிலையை அடைந்திருக்கிறார் விஜய்.

விஜய் பாலிசி:

  • விஜய்க்கு கதை சொல்வதே சவாலான விஷயம். ஏனெனில் கதை கேட்கும் போது எந்தவொரு ரியாக்‌ஷனும் கொடுக்கமாட்டார்.
  • சரியான நேரத்துக்கு வருவது.
  • மாலை 6 மணியுடன் சூட்டிங்கை பேக்கப் செய்வது

இயக்குனர் சரண் சொன்ன விஷயம்:

அஜித்தை வைத்து அமர்க்களம் என்ற மாபெரும் ஹிட் படத்தை கொடுத்தவர் இயக்குனர் சரண். அஜித்தை வைத்து தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்த சரண் விஜயை வைத்தும் படத்தை இயக்க வாய்ப்பு வந்திருக்கிறது. ஆனால் அது நடக்கவில்லை. ஏனெனில் விஜய்க்காக எழுதப்பட்ட அந்த கதை பகல் இரவு என மாறி மாறி நடக்கும் கதையாம். மும்பையில் நடக்கும் மாதிரியான கதையாம்.

அந்த நேரத்தில் விஜய் ஒரு பாலிசி வைத்திருந்தாராம். இரவு நேர சூட்டிங் என்றால் வேண்டாம் என்று சொல்லி வந்தாராம். அதன் காரணத்தினால்தான் சரணுடன் விஜய் இணையவே இல்லையாம்.

Continue Reading

More in Cinema News

To Top