
Cinema News
Jananayagan: கரூர் சம்பவத்தால் ஜனநாயகனுக்கு வந்த சிக்கல்!… விஜய் ரசிகர்கள் சோகம்!…
TVK Vijay: கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருப்பவர் விஜய். ஜனநாயகன் படத்திற்கு இவர் வாங்கிய சம்பளம் 225 கோடி என சொல்கிறார்கள்.
சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே அதை விட்டுவிட்டு அரசியலுக்கு செல்கிறேன் என்று சொல்லி தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி தற்போது அரசியல்வாதியாக மாறி இருக்கிறார்..
கடந்த சனிக்கிழமை அவர் கரூருக்கு சென்றிருந்தபோது அவரைக் காண பல்லாயிரக்கணக்கில் மக்கள் கூடியதில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு அதில் சிக்கி 41 பேர் வரை உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு பல விவாதங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு விஜய் முழு பொறுப்பேற்க வேண்டும், இதற்கு தொடர்புள்ள தவெகவினரை தண்டிக்க வேண்டும் என திமுக, நாதக போன்ற கட்சியை சேர்ந்தவர்கள் கூறி வருகிறார்கள்.
விஜயின் ஆதரவாளர்களும், தவெகவினரும் ‘இதில் எங்கள் தவறு ஒன்றுமில்லை.. காவல்துறை சரியான பாதுகாப்பு கொடுக்கவில்லை, இது திட்டமிட்ட சதி’ என்றெல்லாம் பேசி வருகிறார்கள். வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் நடந்து மூன்று நாட்கள் கழித்து வீடியோவில் பேசிய விஜய் இந்த சம்பவத்திற்கு யார் காரணம் என மக்களுக்கு தெரியும். விரைவில் உண்மை வெளியே வரும். என்னை பழிவாங்க நினைத்தால் என்னை எது வேண்டுமானாலும் செய்யுங்கள்.. என் கட்சி நிர்வாகிகளே எதுவும் செய்ய வேண்டாம்’ என பேசி இருந்தார் இதுவும் விமர்சனத்திற்கு உள்ளானது.
கரூரில் நடந்த சம்பவம் அவர் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படத்தையும் பாதித்திருக்கிறது, இந்த திரைப்படம் 2026 ஜனவரி 9ம் தேதி வெளியாகவுள்ளது. அதோடு, அக்டோபர் 5ம் தேதி இப்படத்தின் முதல் பாடலை வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் கரூர் சம்பவத்தால் அதை காலவரையின்றி தள்ளி வைத்து விட்டார்கள்.
அதேபோல் டிசம்பர் மாதம் இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்தனர். கரூரில் இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்ட நிலையில் இது நடக்குமா?. அப்படியே நடந்தாலும் விஜய் அதில் கலந்துகொள்வாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.