
Cinema News
Mandaadi: சூரி பட ஷூட்டிங்கில் விபத்து.. கடலில் மூழ்கிய இருவர்!.. பரபர அப்டேட்!…
Soori: கோலிவுட்டில் பல படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் சூரி. துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்த சூரி வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பரோட்டா சாப்பிடும் காட்சியில் நடித்து ரசிகர்களிடம் ரீச் ஆனார். அதன்பின் சிவகார்த்திகேயனுடன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் இவருக்கு கை கொடுத்தது. அதேபோல் ரஜினி முருகன் படமும் பெரிய அளவில் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.
அதன்பின் விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட பலரின் படங்களிலும் சூரி நடித்தார். அப்படி நடித்து வந்தவரை வெற்றிமாறன் அழைத்து விடுதலை படத்தில் கதையின் நாயகனாக நடிக்க வைத்தார். அந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார் சூரி. அதன்பின் விடுதலை 2, கருடன், மாமன், கொட்டுக்காளி போன்ற படங்களில் கதையின் நாயகனாக சூரி நடித்திருந்தார்.

இதில் கருடன், மாமன் ஆகிய 2 படங்களும் சூப்பர் ஹிட் அடித்தது. எனவே, முன்னணி நடிகர்களில் ஒருவராக சூரி மாறிவிட்டார். தற்போது மண்டாடி என்கிற படத்தில் நடித்து வருகிறார் சூரி. இது முழுக்க முழுக்க மீனவர்கள் பற்றிய கதை. இப்படத்தின் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. ஏனெனில் சூரியின் தோற்றம் மிரட்டலாக இருந்தது.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடல் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்தான், படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது படகு நீரில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் கடலில் மூழ்கினர். அதன்பின் அவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். அதேநேரம் பல லட்சம் மதிப்புள்ள படப்பிடிப்பு சாதனங்கள் நீரில் மூழ்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.