
Cinema News
Rajinikanth: இமயமலைக்கு போன ரஜினி!.. வைரல் புகைப்படங்கள்!.. ஜெயிலர் 2 என்னாச்சி?!…
Rajinikanth: தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் இந்திய சினிமா அளவிலும் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். சினிமாவிற்கு வந்து 50 வருடங்கள் ஆகிவிட்ட நிலையிலும் இன்னமும் ஹீரோவாக நடித்து வரும் நடிகர் இவர் மட்டுமே. இவர் சினிமாவில் நடிக்க வந்தபோது நடித்துக் கொண்டது நடிகர்கள் இப்போது ரிட்டயர்ட் ஆகி விட்டார்கள் அல்லது குணச்சித்திர நடிகர்களாக மாறிவிட்டார்கள். ஆனால் ரஜினி இப்போதும் ஒரு மாஸ் நடிகராக, வசூலை குவிக்கும் நடிகராக இருப்பது பெரிய ஆச்சரியம்தான்.

நடிகர் ரஜினிக்கு சினிமாவும் ஆன்மீகமும் இரண்டு கண்கள் என்று சொல்ல வேண்டும். தினமும் தியானம் செய்வது, பூஜை செய்வது நேரம் கிடைக்கும் போதெல்லாம் இமயமலைக்கு செல்வது. அங்கு பாபா குகையில் பல மணி நேரங்கள் செலவிடுவது என ஆன்மீகத்தில் ஈடுபட்டு வருகிறார்.

லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான கூலி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. 1000 கோடி வசூலை அடிக்கும் முதல் தமிழ் படமாக கூலி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்படம் 500 கோடி வசூலை மட்டுமே பெற்றது. ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் 2026 ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது.

ஜெயிலர் 2 படத்தின் படபிடிப்பு வேகமாக நடந்து வரும் நிலையில் ரஜினி திடீரென இமயமலைக்கு சென்றிருக்கிறார். ரிஷிகேஷில் நண்பர்களுடன் அவர் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வெளியாகி வைரலாகி உள்ளது. ஜெயிலர் 2 ஷூட்டிங்கில் கிடைத்திருக்கும் இடைவெளியை பயன்படுத்தி ரஜினி இமயமலைக்கு சென்றிருக்கலாம் என கணிக்கப்படுகிறது. இன்னும் சில நாட்களில் ரஜினி மீண்டும் ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் என சொல்கிறார்கள்.