
Cinema News
Idli kadai: தனுஷுக்கு கை கொடுத்ததே இதான்! ‘இட்லி கடை’ ரிசல்ட்டை பாத்தாலே தெரியும்
Idli kadai:
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் இட்லி கடை. இந்த படத்தை அவரே இயக்கி அதில் நடிக்கவும் செய்திருக்கிறார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருக்கிறார். குல தொழில், அப்பாவின் பாசம் என ஒரு சென்டிமென்டான திரைப்படமாக இந்த படம் வெளியாகியிருக்கிறது. படம் வெளியான முதல் நாள் 5 கோடி இந்த படம் வசூல் செய்திருப்பதாக செய்திகள் உள்ளன.
அதன் பிறகு வெளியான காந்தாரா 2 படத்தின் ஹைப் இட்லி கடை படத்தின் வசூலை கணிசமாக குறைத்து இருக்கிறது. படத்தின் டிஜிட்டல் உரிமையை Netflix நிறுவனம் 45 கோடி ரூபாய்க்கு வாங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுவரை படத்திற்கு ஒரு ஆவரேஜான விமர்சனம் மட்டுமே எழுந்துள்ளன. படத்தைப் பார்த்த சிலர் இந்த படம் உணர்ச்சி பூர்வமாக இருப்பதாகவும் பதிவிட்டு வருகின்றனர் .
மக்களின் கருத்து இந்த படத்திற்கு சாதகமாகவே உள்ளது . இந்த நிலையில் தனுஷ் இன்று தன்னுடைய குடும்பத்துடன் அவருடைய குலதெய்வ கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார். அங்குள்ள மக்கள் இதைப் பற்றி கூறும்பொழுது எப்பொழுதுமே தனுஷ் இங்கே வருவார். ஆனால் எங்களுடன் செல்பி எடுப்பதோ புகைப்படம் எடுப்பதும் எதுவுமே கிடையாது. சாதாரண ஒரு நபராக வந்து அவருடைய குலதெய்வ வழிபாட்டை முடித்துவிட்டு சென்று விடுவார் என நல்ல விதமாகவே கூறியிருந்தனர்.
குறிப்பாக அவர் ஒவ்வொரு ஆடியோ விழாவிலும் பேசும்பொழுது குலதெய்வம் கோயில் பற்றி அவருடைய கருத்து என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவே இருக்கும். அதற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தே பேசியிருக்கிறார். அதற்கு ஏற்ப இட்லி கடை படத்திலும் தன்னுடைய சொந்த ஊரை மறக்கக்கூடாது, குல தொழிலை மறக்கக்கூடாது என்பதை காட்டிய திரைப்படமாகவே இந்த படம் அமைந்திருக்கிறது.
இதையெல்லாம் தாண்டி தனுசுக்கு என ஒரு சென்டிமென்ட் இருக்கிறது. அவருடைய படத்தில் அப்பா மகன் சென்டிமென்ட் மிகவும் அந்த படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்திருக்கிறது. யாரடி நீ மோகினி திரைப்படம் அப்பா மகன் சென்டிமென்ட் திரைப்படமாகவே இருக்கும். அதில் ரகுவரன் அப்பாவாகவும் தனுஷ் மகனாகவும் நடித்திருப்பார். அதைப்போல திருச்சிற்றம்பலம் படத்திலும் தந்தைக்கும் மகனுக்குமான உறவு அந்த படத்தின் வெற்றிக்கு பெரிய அளவில் உறுதுணையாக இருந்திருக்கின்றன .
அந்த வரிசையில் இட்லி கடை படத்திலும் ராஜ்கிரண் மற்றும் தனுசுக்கு இடையேயான அந்த தந்தை மகன் உறவு நல்ல ஒரு வரவேற்பை பெற்றிருக்கிறது. சமீப காலமாக இப்படி ஒரு சென்டிமென்ட் தனுசுக்கு வொர்க் ஆகி வருவதாக சமூக வலைதளங்களில் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.