
Cinema News
SMS: சந்தானம் இல்லைனா என்ன? ஜீவா- ராஜேஷ் கூட்டணியில் களமிறங்கும் அந்த காமெடியன்ஸ்
SMS:
கடந்த 2009 ஆம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் சிவா மனசுல சக்தி. இந்தப் படத்தில் ஜீவா நாயகனாக நடித்திருப்பார். சந்தானத்தின் காமெடி இந்தப் படத்தின் வெற்றிக்கு பெரிதும் உதவியாக இருந்தது. ஜீவா சந்தானம் காம்போவே வேற லெவலில் இருந்தன. டைமிங்கான காமெடி படத்திற்கு உதவியாக இருந்தது. குறிப்பாக அங்கிள் அங்கிள் காமெடி இன்று வரை அனைவராலும் ரசிக்கும் படியாக இருக்கின்றன.
ஜீவாவை எங்கு பார்த்தாலும் இந்த அங்கிள் காமெடியைத்தான் ரி கிரியேட் செய்து நடிக்க சொல்வார்கள். இவர்களுடன் ஊர்வசி அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்தை வேறொரு டிராக்கில் கொண்டு சென்றது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் படத்தின் இயக்குனர் ராஜேஷ் இறங்கினார். அதிலிருந்தே இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தார்கள்.
அதற்கேற்ப ராஜேஷ் அதன் பணியை ஆரம்பித்தார். ஆனால் சந்தானம் காமெடியனாக நடிப்பாரா என்பதுதான் அனைவரின் சந்தேகமாக இருந்தது. ஏனெனில் சந்தானம் இப்போது ஹீரோவாக நடித்து வருவதால் மீண்டும் காமெடியனாக நடிக்க மாட்டேன் என்ற முடிவில் இருந்தார். இருந்தாலும் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாகவும் செய்திகள் வெளிவந்தன.
அதனால் இந்தப் படம் சிவா மனசுல சக்தி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்காது. வேறொரு கதையாகத்தான் இருக்கும் என்றும் சொல்லப்பட்டது. இது ஜீவாவுக்கு 47வது படமாக அமைய இருக்கிறது. இந்த நிலையில் ஜீவா ராஜேஷ் மீண்டும் இணையப் போகும் இந்தப் படத்தில் காமெடியனாக பரிதாபங்கள் புகழ் கோபி சுதாகர் நடிக்க வாய்ப்பிருப்பதாக ஒரு புதிய தகவல் கிடைத்துள்ளது.

அதற்காக அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் ஹீரோயினாக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் நடித்த ரம்யாதான் இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறாராம். கோபி சுதாகருக்கு என இங்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போதைய சூழலில் நடக்கும் சம்பவங்களை அப்படியே காமெடியாக எடுத்து நடிப்பதில் சிறந்தவர்கள் கோபி சுதாகர். அதனால் படத்தில் இவர்களுடைய காமெடி எப்படி எடுபடும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்