
Cinema News
Simbu-Dhanush: 14 படம் நடிச்சது பெருசு இல்ல.. யாருக்கு அதிக ஹிட்? சிம்புவா? தனுஷா?
Simbu-Dhanush:
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் வரிசையில் அடுத்த இரட்டை போட்டியாளர்களாக பார்க்கப்பட்டவர்கள் சிம்புவும் தனுஷும். சிம்பு குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தாலும் ஒரு கட்டத்திற்கு பிறகு தனுஷ் சிம்பு போட்டி கடுமையாக பார்க்கப்பட்டது. இருவருமே ஆளாளுக்கு படங்களை தொடர்ந்து கொடுத்து வந்ததன் மூலம் தங்களுக்கென ஒரு நிலையான ரசிகர்களை தக்க வைத்துக் கொண்டனர்.
இடையில் சிம்பு ஓவராக வெயிட் போட அவருடைய கண்டீசன் என எல்லாமே சேர்த்து அவருக்கே பேக் ஃபைர் ஆனது. அதாவது நைட் சூட் என்றால் வரமாட்டேன் என சொல்வது, காலை சூட்டுக்கு லேட்டாக வருவது என தயாரிப்பாளர்கள் மத்தியிலும் இயக்குனர்கள் மத்தியிலும் சிம்புக்கு கெட்ட பேர் உருவானது. அதுவும் ஆரம்பகாலத்தில் சிம்பு அதிகமாகவே கோவப்படுவார்.
மார்கெட்டை தக்க வைத்த தனுஷ்:
அதை பல மேடைகளில் பார்த்திருக்கிறோம். இதனால் அவருக்கு படங்களின் வாய்ப்பு குறைய தொடங்கியது. ஒரு கட்டத்திற்கு பிறகு சிம்புவுக்கு படங்களே வரவில்லை.இனிமேல் சிம்பு அவ்ளோதானா என்ற சூழ் நிலையும் உருவானது. இன்னொரு பக்கம் தனுஷ் பல நல்ல நல்ல கதைகளம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வந்தார். அதனால் ரசிகர்கள் மத்தியில் தனுஷுக்கு நல்ல ஒரு வரவேற்பு வர தொடங்கியது.
இதெல்லாம் ஒரு மூஞ்சியா என்று கேட்ட ரசிகர்கள் மத்தியில் என்னாலும் நடிக்க முடியும் என்பதை தொடர்ந்து நிரூபித்து வந்தார் தனுஷ். இதனால் தனுஷின் மார்கெட் யாரும் எதிர்பாராத அளவுக்கு உயர்ந்தது. அந்த நேரத்தில்தான் சிம்பு கம்பேக் கொடுத்தார். அதுவரை ஆளே மாறிப்போய் வெயிட் போட்டு குண்டாக இருந்த சிம்பு ஈஸ்வரன் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார்.
சிம்புவின் கம்பேக்:
அந்தப் படம் சரியாக ஓடவில்லை என்றாலும் அதற்கு அடுத்து வெளியான மாநாடு திரைப்படம் அவருக்கு லட்டாக அமைந்தது. நூறு கோடி கிளப்பிலும் அந்தப் படம் அமைந்தது. மாநாடு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு சிம்பு அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி நடித்து வந்தார். இந்த நிலையில் சிம்புவின் கம்பேக்கிற்கு பிறகு சிம்பு எத்தனை படங்களில் நடித்தார்? அதில் எத்தனை படம் ஹிட்?
அதை போல் சிம்பு கம்பேக்கிற்கு பிறகு தனுஷ் எத்தனை படத்தில் நடித்தார்? அவருக்கு எத்தனை படம் ஹிட்? என ஒரு தகவல் சோசியல் மீடியாக்களில் வெளியாகியிருக்கின்றன. அதாவது ஈஸ்வரன் திரைப்படம் 2021 ஆம் ஆண்டு வெளியானது. அதிலிருந்து சிம்பு மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல, தக் லைஃப் என ஐந்து படங்களில் நடித்தார். அதற்கு அடுத்தபடியாக அவருடைய நடிப்பில் இரண்டு படங்கள் பேச்சு வார்த்தையில் இருக்கின்றன.
சிம்பு தனுஷ் – யார் அதிக வெற்றி?
அதே போல் சிம்புவின் கம்பேக்கிற்கு பிறகு அதாவது 2021 ஆம் ஆண்டிலிருந்து இந்த வருடம் வரை தனுஷ் கர்ணன், ஜெகமே தந்திரம், அட்ராங்கி ரே , மாறன், கிரே மேன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி, கேப்டன் மில்லர், ராயன், குபேரா, இட்லி கடை என 12 படங்களில் நடித்திருக்கிறார். மேலும் ஒரு ஹிந்தி படம் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன. அவருடைய 54வது படத்தின் சூட்டிங்கும் முடிந்து விட்டன.
இதில் சிம்புவுக்கு 5 படங்களில் 3 படம் ஹிட் என்றும் தனுஷுக்கு 12 படங்களில் 3 படங்கள் மட்டுமெ ஹிட் எனவும் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றன. ஆனாலும் தனுஷின் திறமையை வெளிப்படுத்திய படங்களாகவே மீதமுள்ள படங்கள் அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.