
Cinema News
STR49 படத்தில் அந்த நடிகை?!… ஆனாலும் வெற்றிமாறன் போட்ட கண்டிஷன்!…
STR49: வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க சிம்பு நடிப்பில் ஒரு படம் உருவாகவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. வழக்கமாக தனுஷுடன் கூட்டணி போடும் வெற்றிமாறன் திடீரென சிம்புவுடன் கூட்டணி அமைத்தது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கி நடித்து வெளியான வட சென்னை படத்தின் கிளைக்கதை என வெற்றிமாறன் கூறியிருந்தார்.
பார்க்கிங் பட இயக்குனருடன் சிம்பு ஒரு படம் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதில் சில சிக்கல்கள் ஏற்பட வெற்றிமாறன் படத்தை சிம்பு தேர்ந்தெடுத்தார். சிம்புவை வைத்து சில நாட்கள் புரமோஷன் சூட் எல்லாம் நடத்தினார் வெற்றிமாறன். ஆனால் சிம்பு மற்றும் வெற்றிமாறன் ஆகியோரின் சம்பள பிரச்சனை காரணமாக இந்த படத்தின் வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பின் வெற்றிமாறன் கலைப்புலி தாணு மற்றும் சிம்புவுடன் பேசி அந்த பிரச்சினையை தீர்த்து வைத்தார்.
சிம்பு தற்போது வெளிநாட்டில் இருக்கிறார். அதேநேரம் வெற்றிமாறன் எப்போது அழைத்தாலும் சிம்பு வந்து விடுவேன் என சொல்லிவிட்டார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என செய்திகள் கசிந்தது. அதோடு, அனிருத்தின் பிறந்தநாளான அக்டோபர் 16ஆம் தேதி இந்த படத்தின் புரமோ வீடியோவை தியேட்டர்கள் மற்றும் youtube என இரண்டிலும் வெளியிட படக்குழு திட்டமிட்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தற்போது செய்திகள் கசிந்திருக்கிறது. அதேநேரம் ‘என் படத்தில் கதாநாயகிக்கு மேக்கப் இருக்காது. அவரிடம் சொல்லிவிடுங்கள். இதற்கு சம்மதித்தால் ஓகே’ என வெற்றிமாறன் சொல்லி இருக்கிறாராம். சமந்தா என்ன முடிவெடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.