
latest news
Vijay: 9 நாட்கள் கழித்து மௌனம் கலைத்த விஜய்!… நேரில் செல்லாமல் இப்படி செய்யலாமா?!…
TVK Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் கடந்த சில வாரங்களாகவே ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் 15-ல் இருந்து 20 நிமிடம் பேசி வருகிறார். அவர் அப்போது திமுகவை மிகவும் கடுமையாக விமர்சித்து பேசினார்.
கரூரில் நடந்த சோகம்:
திருச்சி, அரியலூர் துவங்கி திருவாரூர், நாமக்கல் முடித்து கரூருக்கு சென்றபோதுதான் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டது. அவரின் பிரச்சார வாகனம் மக்கள் கூட்டத்தில் நுழைந்த போது சில காரணங்களால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு நெரிசலில் சிக்கி 41 பேர் வரை மூச்சு திணறி உயிரிழந்தனர். இதில் 30 பேர் வரை சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 11 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 11 பேர் இழந்தனர். விஜய் வேனின் மீது நின்று பேசிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்திருக்கிறது. ஆனால் விஜய் அங்கிருந்து கிளம்பிய சிறிது நேரம் கழித்து இந்த செய்தி வெளியானது.

விஜய் வெளியிட்ட வீடியோ:
இந்த சம்பவம் தொடர்பாக தனக்கு சொல்லப்பட்டாலும் விஜய் அங்கிருந்து கிளம்பி சென்னை சென்று விட்டார். இந்த சம்பவத்திற்கு விஜயே பொறுப்பேற்க வேண்டும் என திமுக ஆதரவாளர்கள் பேசி வருகிறார்கள். இந்த சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் கழித்து வீடியோ போட்ட விஜய் ‘ கரூரில் மட்டுமே இப்படி நடந்து விட்டது. இது யாரால் நடந்தது என்பது மக்களுக்கு தெரியும். விரைவில் உண்மை வெளியே வரும். என்னை பழிவாங்க நினைத்தால் என்னை எது வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் நிர்வாகிகளை எதுவும் செய்ய வேண்டாம்’ என பேசினார்.
விஜய் மீது விழுந்த பலி:
இதையும் பலரும் கடுமையாக விமர்சனம் செய்தனர். இப்போதும் விஜய் சம்பவத்திற்கு பொறுப்பேற்கவில்லை. விஜய் தன் தவறை உணரவில்லை என அவரை திட்டினார்கள். ஒரு பக்கம் இந்த வழக்கை விசாரித்த நீதிபதியும் ‘விஜய்க்கு தலைமை பண்பு இல்லை. ஒரு கட்சியின் தலைவனும், முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களை அப்படியே விட்டுவிட்டு ஓடிவிட்டனர். இப்படி ஒரு கட்சியை நான் பார்த்ததே இல்லை’ என விமர்சித்தார்.

‘விஜய் எப்போது கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் ஆறுதல் சொல்வார்?’ என்கிற கேள்வி பலரிடமும் இருக்கிறது. அப்படி அவர் சென்றால் மீண்டும் அவரை பார்க்க ரசிகர்கள் கூடுவார்கள். போலீசார் தடியடி நடத்த வேண்டி வரும் என்றெல்லாம் பலரும் பேசுகிறார்கள். ஒருபக்கம் விஜய் கரூருக்கு நேரில் செல்லப் போவதில்லை. மாறாக பாதிக்கப்பட்டவர்களிடம் வீடியோ காலில் பேசுவார் என்கிற செய்தியும் சமீபத்தில் வெளியானது. தற்போது அது உண்மையாக இருக்கிறது.
வீடியோ காலில் பேசிய விஜய்:
கரூர் தூரத்தில் பாதிக்கப்பட்ட 20 குடும்பத்துடன் விஜய் வீடியோ காலில் பேசியிருக்கிறார். கூட்ட நெரிசலில் உயிரிழந்த தனுஷ் என்கிற இளைஞரின் அம்மா மற்றும் தங்கையிடமும் பேசியிருக்கிறார். ‘நடக்கக் கூடாது நடந்து விட்டது. இது எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாது. வருத்தப்படாமல் இருங்கள். உங்களுக்கு தவெக கழகம் துணை நிற்கும். நான் இருக்கிறேன்’ என்றெல்லாம் அவர்களுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் கொடுத்திருக்கிறார் விஜய். ஒவ்வொரு குடும்பத்திடமும் விஜய் சுமார் 15 முதல் 20 நிமிடம் வரை பேசியதாக சொல்லப்படுகிறது. அதே போல் விஜய் அப்படி வீடியோ காலில் பேசியபோது அதை யாரும் புகைப்படமோ, வீடியோவோ எடுக்க வேண்டாம் எனவும் சொல்லிவிட்டாராம்.
விஜய் செய்தது சரியா?…
‘கரூரில் இந்த சம்பவம் நடந்து 9 நாட்கள் கழித்து விஜய் தனது மௌனம் கலைத்து இதை செய்திருக்கிறார். ஒரு கட்சியின் தலைவராக விஜய் நேரில் சென்றிருருக்க வேண்டும். அதை செய்யாமல் வீடியோ காலில் பேசுவது சரியா?’ என பலரும் அவரை விமர்சிக்க தொடங்கி விட்டனர். எதை செய்தாலும் அதை யாருக்கும் தெரியாமல் அமைதியாக செய்வது அரசியலுக்கு செட்டாகாது. ஒரு அரசியல்வாதியின் நடவடிக்கைகள் வெளியே தெரிய வேண்டும். அப்போதுதான் அது மக்களிடம் சென்று ரீச் ஆகும். அதுதான் ஓட்டாக மாறும். ஆனால் ஒரு அரசியல்வாதி எப்படி செயல்படுவாரோ அதற்கு நேர் எதிராக விஜய் செயல்படுவது சரியான முறை இல்லை’ என அரசியல் விமர்சகர்களும் அவரை விமர்சித்து வருகிறார்கள்.