Connect with us
pradeep

Cinema News

SK நடிக்க வேண்டிய கதையில் பிரதீப் ரங்கநாதன்!.. கை மாறியது எப்படி?…..

Pradeep Ranganathan: கோமாளி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே படம் மூலம் ஹீரோவாகவும் வெற்றி பெற்றார். அதன்பின் வெளியான டிராகன் படமும் சூப்பர் ஹிட் அடிக்க கோலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகராக பிரதீப் மாறிவிட்டார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIK என்கிற படத்தில் நடித்திருக்கிறார். இது காதல் கலந்த சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகியுள்ளது.

இந்த படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கிறார். எதிர்காலத்தில் நடப்பது போல இப்படத்தின் கதையை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இந்த படத்தை மாஸ்டர் மற்றும் லியோ ஆகிய படங்களை தயாரித்த லலித்குமாரும், விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ளனர். 60 கோடி பட்ஜெட் என துவங்கி இப்படம் 90 கோடியில் முடிந்திருக்கிறது.

ஒருபக்கம் கீர்த்தீஸ்வரன் என்பவரின் இயக்கத்தில் Dude என்கிற படத்திலும் பிரதீப் நடித்திருக்கிறார். இதுவும் காதல் கதையாக உருவாகியுள்ளது. பிரேமலு பட புகழ் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்கிறார். Dude மற்றும் LIK ஆகிய இரண்டு படங்களையும் தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டனர்.

lik
lik

ஆனால், ஒரே நேரத்தில் பிரதீப்பின் 2 படங்களும் வெளியானால் சிக்கல் என்பதால் LIK படத்தின் ரிலீஸ் தேதியை டிசம்பர் 18ம் தேதிக்கு மாற்றிவிட்டனர். ஒருபக்கம், லவ் டுடே படத்திற்கு பின் 3 படங்களில் நடித்துள்ள பிரதீப் அடுத்து மீண்டும் ஒரு படத்தை அவர் இயக்கி நடிக்க திட்டமிட்டிருக்கிறாராம். இதுவும் சயின்ஸ் பிக்‌ஷன் படமாக உருவாகவுள்ளது.

இந்நிலையில், LIK படத்தில் முதலில் நடிக்கவிருந்தது சிவகார்த்திகேயன் என்பது தெரியவந்திருக்கிறது. சுமார் 130 கோடி பட்ஜெட்டில் இப்படத்தை உருவாக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால், அவர் நடிக்காமல் போகவே இந்த கதை பிரதீப்பிடம் சென்றிருக்கிறது.

Continue Reading

More in Cinema News

To Top