
Cinema News
அஜித்தால விஜய் படம் போச்சே!.. புலம்பும் AK64 பட தயாரிப்பாளர்!.. சோகங்கள்!…
Ajith Vijay: கோலிவுட்டில் விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளராக வளம் வருபவர் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல். சின்ன பட்ஜெட்டுகளில் சில படங்களை தயாரித்திருக்கிறார். பல படங்களை வாங்கி வெளியிட்டிருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள புதிய படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான்.
உண்மையில் அஜித் படத்தை தயாரிக்கும் அளவுக்கு இவர் பெரிய தயாரிப்பாளர் இல்லை. ஏனெனில் அந்த படத்தின் பட்ஜெட் 300 கோடி. ஆனாலும் அஜித் கொடுத்த நம்பிக்கையில் இந்த படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் ராகுல் இந்த படத்தில் சம்பளத்துக்கு பதிலாக ஓடிடி மற்றும் சேட்டிலைட் உரிமைகளை அஜித் வாங்கி கொள்வதாக சொல்லி இருக்கிறாராம்.
அஜித்திடம் ஒரு பழக்கம் உண்டு. பழக்கம் என்று சொல்வதை விட பாலிசி என்ன சொல்லலாம். தனது படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனம் தனது படம் முடியும் வரை வேறொரு எந்த படத்தையும் தயாரிக்கக் கூடாது என நினைப்பார். அஜித் இதை பல வருடங்களாக பின்பற்றி வருகிறார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள LIK படத்தின் தமிழக வெளியீடு உரிமையை ராகுல் வாங்குவதாக பேசியிருந்தனர். ஆனால் அஜித்தின் படம் அடுத்த மாதம் துவங்கவிருப்பதால் இது அஜித்துக்கு பிடிக்காது என்பதாலேயே அந்த படத்தை வேண்டாம் என ராகுல் சொல்லிவிட்டாராம். அதேபோல் விஜயின் ஜனநாயகன் படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையையும் ராகுல் வாங்குவதாக செய்திகள் வெளியானது. ஆனால் கண்டிப்பாக இது அஜித்துக்கு பிடிக்காது என்பதால் அந்த படமும் ராகுலின் கையை விட்டு போக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
ஒரு பக்கம் ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு நெருக்கமாக ராகுல் இருப்பதால் ஜனநாயகன் படத்தை வெளியிடும் உரிமையை அவரிடம் கொடுக்க வேண்டாம் என விஜயை சொல்லிவிட்டதாகவும் ஒரு செய்தி இருக்கிறது.