
latest news
தீபாவளி சரவெடி பட்டாசு!.. கன்பார்ம் ஹிட்!. Dude டிரெய்லர் வீடியோ பாருங்க!..
Pradeep Ranganathan: ரவி மோகன் ஹீரோவாக நடித்த கோமாளி திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக களமிறங்கியவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது. அதன்பின் மூன்று வருடங்கள் கழித்து லவ் டுடே என்கிற படத்தை இயக்கி அதில் பிரதிப்பே ஹீரோவாக நடித்தார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் இப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.
எனவே தமிழ் சினிமாவில் மார்க்கெட் உள்ள ஒரு ஹீரோவாக பிரதீப் மாறினார். எனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIK, அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் ஆகிய படங்களில் நடித்தார் பிரதீப். இதில் டிராகன் படம் முதலில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. LIK திரைப்படம் டிசம்பர் 18ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுபோக Dude என்கிற திரைப்படத்திலும் பிரதீப் நடித்திருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்திருக்கிறார். சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இந்த படத்தின் சில பாடல்கள் ஏற்கனவே ஹிட் அடித்தது. இந்த படத்தை கீர்த்தீஸ்வரன் என்பவர் இயக்கி இருக்கிறார். காதல் கலந்த காமெடி படமாக Dude உருவாகி இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டு இருக்கிறது.
பிரதீப் ரங்கநாதன் தனது மாமா பொண்னான மமிதா பைஜூவுடன் சேர்ந்து ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நடத்த அதில் வரும் சிக்கல், மமிதா பைஜுடன் காதல், காமெடி மற்றும் எமோஷனலான கலந்த கலவையாக டியூட் படத்தை உருவாக்கியுள்ளனர். டிரெய்லரை பார்க்கும்போது கண்டிப்பாக இப்படம் பிரதீப்புக்கு அடுத்த ஹிட் படமாக அமையும் என்றே கணிக்கப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு இப்படம் வருகிற 17ம் தேதி வெளியாகவுள்ளது.