">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
சரக்கு கிடைக்கல! – சாலையோர மரத்தில் தூக்கில் தொங்கிய ஓட்டுனர் !
புதுக்கோட்டை அருகே மது குடிக்க முடியாததால் ஏற்பட்ட மன உளைச்சலில் ஓட்டுனர் ஒருவர் மரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்தியாவில் அறிவிக்கப்பட்ட 13 நாட்கள் ஊரடங்கு 6 நாட்களைக் கடந்துள்ளது. ஆனால் அதற்குள்ளாகவே குடி அடிமைகளால் குடிக்காமல் இருக்க முடியவில்லை. தமிழகத்தில் பல இடங்களில் டாஸ்மாக் கடைகளை உடைத்து சரக்குகளை திருட முயற்சி செய்யப்படுகின்றன.அதோடு இல்லாமல் தமிழகத்தில் சில இடங்களில் மது கிடைக்காததால் சிலர் தற்கொலையும் செய்து கொண்டுள்ளனர். கேரளாவிலும் இந்த எண்ணிக்கை 7 ஆக உள்ளது. இந்நிலையில் இது போன்ற பிரச்சனைகளைத் தடுக்க 12 மணி முதல் 2 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட இருக்கிறது என சமூகவலைதளங்களில் செய்திகள் பரப்பப்பட்டன. ஆனால் அந்த செய்தி உண்மையில்லை என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மதுவுக்கு அடிமையானவர்கள் சிலர் மது கிடைக்காத மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்ளுமளவுக்கு சென்றுள்ளனர் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் லாரி ஓட்டுநர் கருப்பையா என்பவர் குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இதனால் குடிக்கு அடிமையான இவர் தினமும் குடிக்கும் பழக்கத்தை வைத்துக் கொண்டுள்ளார். இதனால் கடந்த 13 நாட்களாக மது கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் சாலையோர மரத்தில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த செய்தியானது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.