
பாங்காங்கில் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.
தமிழ் வெகுஜன எழுத்தின் மாஸ்டர் பீஸ் என சொல்லப்படும் பொன்னியின் செல்வன் நாவலைப் படமாக்க வேண்டும் என்பது இயக்குனர் மணிரத்னத்தின் நீண்டகால கனவு. தள்ளிப்போய் கொண்டே இருந்த அந்த திட்டம் இப்போது கைகூடியுள்ளது. ஒரு வருட முன் தயாரிப்புப் பணிகள், நடிகர்களின் உடல் மாற்றம் மற்றும் பயிற்சிகளுக்குப் பின் இன்று பாங்காங்கில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
இந்த படப்பிடிப்பில் அருள்மொழி வர்மன் கேரக்டரில் நடிக்கும் ஜெயம் ரவி, வந்தியத்தேவன் கேரக்டரில் நடிக்கும் கார்த்தி மற்றும் பூங்குழலி கேரக்டரில் நடிக்கும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். விக்ரம், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடிக்கும் காட்சிகள் அடுத்த கட்டமாக நடைபெறும் என சொல்லப்படுகிறது.



