">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
கோலியிடம் வம்பிழுக்காத ஆஸ்திரேலிய வீரர்கள் – காரணம் சொன்ன் முன்னாள் கேப்டன் !
இந்திய அணியினர் மற்றும் கோலி ஆகியோருடன் ஆஸி வீரர்கள் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடாமல் இருப்பதற்குக் காரணம் ஐபிஎல் போட்டிகள்தான் என்று ஆஸி முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் ஸ்லெட்ஜிங்குக்கு பெயர் பெற்றவர்கள் ஆஸ்திரேலிய அணியினர். பேசியும் மிரட்டியுமே எதிரணி பேட்ஸ்மேன்களை விக்கெட்களைக் கைப்பற்றுவதில் கில்லாடிகள். ஆனால் சமீபகாலமாக இந்திய அணியினருடனான போட்டிகளின் போது இப்படி ஸ்லெட்ஜிங்குகள் பெரிதாக எதுவும் நடக்கவில்லை. அதுவும் குறிப்பாக உலகின் சிறந்த வீரராக இருந்துவரும் கோலியை அவர்கள் மறந்தும் வம்பிழுப்பதில்லை.
இதுகுறித்து ஆஸி அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அதில் ‘உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமாக இந்திய கிரிக்கெட் வாரியம் இருந்து வருகிறது. உள்ளூர் ஐ.பி.எல்., தொடர் முதல் சர்வதேச போட்டி வரை அவற்றைப் பெரிதாக நடத்த நிதி நிலை வலுவாக இருக்கிறது. இதனால் ஆஸ்திரேலியா உள்ளிட்ட எல்லா அணிகளும் அவர்களிடம் பணிந்தன. கோலியுடனோ மற்ற இந்திய வீரர்கள் உடனோ ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட பயந்தனர்.
வழக்கமாக ஆக்ரோஷமாக இருக்கும் வீரர்கள் கோலியுடன் ஐபிஎல் விளையாடி பல கோடிகளை ஆறே வாரங்களில் சம்பாதிக்கவேண்டும் என மனக்கணக்கு போட்டனர். இதனால் ஆஸ்திரேலிய அணியிடம் வழக்கமான ஆக்ரோஷம் காணப்படவில்லை.’ என அவர் கூறியுள்ளார்.