
நடிகை விஜயின் மனைவி சங்கீதா சென்னை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக விஜய் நடிகை ஒருவருடன் தொடர்பில் இருக்கிறார்… நான் எவ்வளவு சொல்லியும் அவர் அந்த தொடர்பை துண்டிக்கவில்லை.. தேவைப்பட்டால் நடிகையின் மீது வழக்கு தொடர்வேன்.. என்று விவாகரத்து மனுவில் குறிப்பிட்டிருந்த பல விஷயங்கள் பகிர கிளப்பியது.
அதோடு வருகிற ஏப்ரல் 20ஆம் தேதி விஜய் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.. இதையடுத்து விஜயின் தீவிர ரசிகர்களும், விசுவாசிகளும் விஜய்க்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்த வருகிறார்கள்.. குறிப்பாக இதற்குப் பின்னால் அரசியல் சதி இருக்கிறது என்கிற ரீதியில் அவர்கள் சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்
.
இதுபற்றி தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்த விஜயின் தீவிர ரசிகை ஒருவர் ‘தளபதிக்கு நிறைய அக்கா இருக்கோம். தங்கச்சிங்க இருக்கோம்.. தேவைப்பட்டா பொண்டாட்டியாவும் இருப்போம்’ என பேசினார்.
இந்த வீடியை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள சினிமா விமர்சகர் புளூசட்ட மாறன் ‘தவெக கூட்டத்தில் பெற்ற பிள்ளை இறந்தாலும் பரவாயில்லை என்று கூறிய தவெக தாரகைகளின் அடுத்த கட்ட முரட்டு வளர்ச்சிதான் இது.. இன்னும் பல கேவலங்களை நாம் பார்க்கப்போகிறோம்’ என பதிவிட்டிருக்கிறார்..
தளபதிக்கு பொண்டாட்டியா நாங்க நிப்போம் – புரட்சி மங்கை அதிரடி.
— Blue Sattai Maran (@tamiltalkies) February 28, 2026
'தவெக கூட்டத்தில்..பெத்த புள்ளை செத்தாலும் பரவாயில்லை' எனக்கூறிய தவெக தாரகைகளின் அடுத்த கட்ட முரட்டு வளர்ச்சி இது.
இன்னும் பல கேவலங்களை நாம் கேட்கப்போவது உறுதி.pic.twitter.com/x5JtErbSXs

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com
