தமிழ் சினிமா வரலாற்றில் உலகமெங்கும் மிகப்பெரிய வசூல் சாதனை செய்த படங்களின் வசூல் தொகுப்புகள்.

2.0 ரஜினிகாந்த் நடிப்பில் சயின்ஸ் பிக்‌ஷன் கதையாக வெளிவந்த 2. ஓ தமிழ் சினிமா வரலாற்றில் 800 கோடி வரை வசூல் செய்த முதல் திரைப்படம்.

லியோ விஜயின் நடிப்பில் ஆக்‌ஷன் த்ரில்லராக வெளிவந்து 600 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது இத்திரைப்படம்.

ஜெயிலர் ரஜினிகாந்தின் தொடர் தோல்விக்கு பின்னர் வெளிவந்த இப்படமும் 600 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.

பொன்னியின் செல்வன் 1 கல்கி நாவலை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் 500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.

விக்ரம் கமல்ஹாசனுக்கு பெரிய கம்பேக் கொடுத்த இப்படம் 420 கோடிக்கும் அதிகமாகவே வசூலித்தது.

பொன்னியின் செல்வன் 2 பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் அதை பூர்த்தி செய்ய முடியாமல் 340 கோடி மட்டுமே வசூல் செய்தது.

கபாலி ரஜினிகாந்த் மற்றும் பா ரஞ்சித் கூட்டணியில் வெளிவந்த இப்படம் 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.