latest news
விவாகரத்து: சமந்தாவை பின்பற்றிய ஹன்சிகா
தனுஷ் நடித்த மாப்பிள்ளை படம் மூலம் அறிமுகம் ஆனவர் ஹன்சிஹா மோத்வானி. முதல் படம் சுமாரான வெற்றீ பெற்றாலும் அவருக்கு மளமளவென படங்கள் குவிந்தன. வேலாயுதம், அரண்மனை, ரோமியோ ஜுலியட், சிங்கம் 2 என பல படங்களில் நடித்து முன்னணி இடத்தை பிடித்தார். சிவகார்த்திகேயன் ஆரம்ப கால் படமான் மான் கராத்தே படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார்.
கடந்த 2022ம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சோஹேல் கதுரியா என்பவரை காதலித்து ஹன்சிகாதிருமணம் செய்தார். ஆனால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படவே இருவரும் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர். தற்போது மும்பை பந்தாரா குடும்பநல நீதிமன்றம் இந்த தம்பதிக்கு பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையில் விவாகரத்தை வழங்கியுள்ளது.
விவாகரத்து வழக்கில் ஹன்சிகா ஜீவனாம்சம் எதுவும் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே நடிகை சமந்தா நாக சைதன்யாவிடமிருந்து விவாக்ரத்து கோரும்போடு ஜீவனாம்சம் எதுவும் வேண்டாம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
