latest news
திரிஷா வந்தது விஜயின் BMW காரா?!.. தோண்டி தோண்டி எடுக்குறாங்களே!…
நடிகர் விஜயின் மனைவி சங்கீதா சில நாட்களுக்கு முன்பு விஜயிடமிருந்து விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.. அந்த விவகாரத்து மனுவை சிலர் போட்டோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்ட பின்னர்தான் இது எல்லோருக்கும் தெரியவந்தது.
விவாகரத்து மனுவில் விஜய்க்கு கடந்த 5 வருடங்களாகவே ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாக சங்கீதா கூறியிருந்தார். அதோடு அந்த நடிகை எனது கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவது எங்களுக்கு அவமானமாக இருந்தது என்றும் கூறியிருந்தார். விஜயுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தது திரிஷா மட்டும்தான்.. எனவே சங்கீதா சொல்வது திரிஷாவைத்தான் என பலரும் புரிந்து கொண்டார்கள்..
விஜய் – சங்கீதா விவாகரத்து விவகாரம் வெளியான சில நாட்களில் விஜய் திரிஷாவை அழைத்துக்கொண்டு ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டார்.. இது சங்கீதாவுக்கு விஜய் கொடுத்த பதிலடியாகவே பார்க்கப்பட்டது. அப்போது முதலே விஜயையும், திரிஷாவையும் பலரும் சமூகவலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்க துவங்கி விட்டனர்.

இனிமேல் கட்சிக்கு முட்டுக் கொடுக்க முடியாது என சமூகவலைத்தளங்களில் தவெக ஆதரவாளர்களே பதிவிட்டதை பார்க்க முடிந்தது. இந்நிலையில்தான், இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்த திரிஷாவிடம் ‘விஜயுடன் நீங்கள் திருமணத்திற்கு சென்றது போய் சர்ச்சையானது பற்றி உங்கள் கருத்து என்ன?’ என நிருபர்கள் கேட்டதற்கு அவர் எந்த பதிலும் சொல்லாமல் சென்று விட்டார்.
அதேநேரம், விஜயின் BMW காரில்தான் திரிஷா விமான நிலையத்திற்கு வந்திருக்கிறார் என ரசிகர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். விஜயின் காரையும் திரிஷா வந்த காரையும் ஒப்பிட்டு அந்த புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்..
