Connect with us

உங்க தோழி சங்கீதாவுக்கு செய்தது தவறுதானே? அதையும் கேட்கவேண்டியதுதானே..சின்மயிடம் கேட்ட ரசிகர்

chinamayi

latest news

உங்க தோழி சங்கீதாவுக்கு செய்தது தவறுதானே? அதையும் கேட்கவேண்டியதுதானே..சின்மயிடம் கேட்ட ரசிகர்

இலக்கியத்திற்கு உயரிய விருதான ஞானபீட விருது கவிஞர் வவைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. 1975ம் ஆண்டில் எழுத்தாளர் அகிலனுக்கு ஞானபீட விருது கிடைத்தது. அதன் பிறகு 2002ம் ஆண்டில் ஜெயகாந்தனுக்கு கிடைத்தது. அதற்கு பின் வைரமுத்துவுக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஞானபீட விருது பெற்ற கவிஞர் வைரமுத்துவை பலரும் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் மர்றும் கமல்ஹாசன் தந்து ட்விடர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ரஜினி, கமல் வாழ்த்துக்களை கண்ட பிரபல சின்மயி கமல்ஹாசன் வாழ்த்திற்கு, கடவுளே, சினிமாவில் பவர்ஃபுல்லான ஆண்கள் அரசியலுக்கு செல்லும்போது அங்கிள் மென்டர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று சொல்லும் பெண்கள் தெரிவிப்பதை கேட்பதே இல்லை. அவர் கட்சியில் உள்ள ஒரு பெண்ணே வைரமுத்துவின் பெயரை தெரிவித்தார். ஆனால் ஆண்களோ தங்களின் சகோதரர்கள், அங்கிள்ஸ், அப்பாக்கள், நண்பர்கள், வழிகாட்டிகள் பக்கம் தான் இருப்பார்கள். பல பெண்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு என்ன வந்தது என்று கூறியுள்ளார்.

மேலும் ரஜினி காந்த வாழ்த்தினை மேற்கோள்காட்டி அய்யோ புரியவே புரியாதா என்று கேட்டுள்ளார் சின்மயி. இதனை கண்ட ரசிகர்கள் பலரும் சின்மயிக்கு ஆதரவாக கருத்துகக்ளை பதிவிட்டு வருகின்றனர். அதிலும் ஒரு ரசிகர் குறிப்பாக வைரமுத்து உங்களுக்கு செய்தது தவறு தான். ஆனால் அதே மாதிரி உங்கள் தோழி திரிஷா சங்கீதாவுக்கு செய்ததும் தவறு தான். நீங்கள் ஏன் சங்கீதாவுக்காக குரல் கொடுக்கவில்லை?. அவரும் பெண் தானே என்று கேள்வி கேட்டுள்ளார்.

To Top