latest news
ஜெயலலிதாவை பார்த்து சொடக்கு போட்டு பேசிய ரஜினி!. செவாலியே விழாவில் நடந்தது என்ன?…
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு செவாலியே விருது அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து 1995ம் வருடம் தமிழக அரசு சார்பில் சிவாஜி கணேசனுக்கு விழா எடுக்க வேண்டும் என ரஜினி முடிவெடுத்து அரசு தரப்பில் சொல்லப்பட்டது.. அப்போது ஜெயலலிதா முதல்வராக இருந்தார். ரஜினி, கமல் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் மற்றும் முதல்வர் ஜெயலலிதா மேடையில் இருக்க சிவாஜி மாஸாக எண்ட்ரி கொடுப்பது போல நிகழ்ச்சியை நடத்தலாம் என ரஜினி நினைத்தார். ஆனால் ஜெயலலிதாவிடம் அது நடக்குமா?.. அதற்கெல்லாம் வாய்ப்பில்லை என அரசு தரப்பில் சொல்லப்பட்டது..
‘அப்படியென்றால் நான் நிகழ்ச்சிக்கு வரல’ என கோபப்பட்டார் ரஜினி. ‘சிவாஜி சாருக்கு விழா. உங்கள் கோபத்தை ஒதுக்கிவச்சிட்டு வாங்க’ என கமல் உள்ளிட்டவர்கள் சொல்ல ரஜினி அந்த விழாவில் கலந்து கொள்ள சம்மதித்தார். ஆனால் சிவாஜி, ரஜினி, கமல் என பலரும் காத்திருக்க ஒரு மணி நேரம் தாமதமாக வந்தார் ஜெயலலிதா.. மேடையில் ஏறிய ஜெயலலிதா அனைவரும் வணக்கம் சொல்ல கோபத்திலிருந்த ரஜினி ஜெ.வுக்கு வணக்கம் சொல்லாமல் முகத்தை திருப்பிக் கொண்டார்.. ஏனெனில், சிவாஜியை காத்திருக்க வைத்து ஜெயலலிதா அவரை அவமரியாதை செய்துவிட்டதாக ரஜினி நினைத்தார்.

மைக்கை பிடித்த ரஜினி எடுத்தவுடனேயே ‘இதெல்லாம் எனக்கு பிடிக்காது’ என்றார் அதிரடியாக.. மேடையில் இருந்து எல்லோரும் அதிர்ந்துவிட்டார்கள். ரஜினி தன்னைத்தான் சொல்கிறார் என ஜெயலலிதாவும் புரிந்து கொண்டார். ‘நீங்க திறந்து வச்சீங்களே ஃபிலிம் சிட்டி.. அப்பவே சிவாஜி சாரை கௌரவப்படுத்தி இருக்கணும்.. அதை நீங்க செய்யல.. சரி அந்த தப்பையெல்லாம் இப்ப சரி செஞ்சுட்டீங்க’ என்றார் ரஜினி.. மம்முட்டி, சிரஞ்சீவி, ஸ்ரீதேவி என இந்திய சினிமாவின் முக்கிய பிரபலங்கள் மேடையில் இருக்க அப்படி பேசினார் ரஜினி.. இது அதிமுக தொண்டர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
விழா முடிந்ததும் ரஜினியை தாக்க வந்தார்கள்.. அப்போது பாக்யராஜ்தான் ரஜினியை பாதுகாப்பாக காரில் ஏறி அனுப்பி வைத்தார். பாக்யராஜ் 50 விழாவில் ரஜினி பேசியபோது ‘நான் ஜெயலலிதாவை மேடையில் வைத்துக் கொண்டு ஆவேசமாக பேசிட்டேன்னு அதிமுக தொண்டர்கள் என்னை தாக்க வந்தாங்க.. அப்போது பாக்கியராஜ்தான் என்னை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பிச்சார்’ என சொல்லியிஇருந்தார்.. அது இந்த நிகழ்வுதான்..
இதுதான் ஜெயலலிதா மீது ரஜினிக்கு கோபத்தை ஏற்படுத்திய முதல் சம்பவம். அதன்பின் பாட்ஷா பட விழாவில் ‘தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் பெருகிவிட்டது.. அரசு வேடிக்கை பார்க்கிறது’ என்று பேசினார்.. அதேபோல் ‘ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது’ என பேசினார்.. ஜெயலலிதாவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக மூப்பனாரை கலைஞருடன் கூட்டணி அமைக்க வைத்து ஜெயலலிதாவை தோற்கடித்தார் ரஜினி
