தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, சமீப காலமாக பல வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்த வகையில், விஸ்வநாத் & சன்ஸ் படமும் இடம் பெறும் என்பது தெரிகிறது. காரணம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
தனுஷ் நடித்த ‘வாத்தி’ மற்றும் துல்கர் சல்மான் நடித்த ‘லக்கி பாஸ்கர்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இந்தப் படத்தை இயக்குகிறார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ்மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனங்கள் சார்பில் நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
படத்தில் சூயாவுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்கிறார். மேலும் முக்கிய வேடத்தில் ரவீணா டாண்டன். ராதிகா சரத்குமார், பவானி ஸ்ரீ, பிஜார்ன் சுர்ராவ் ஆகியோர் நடிக்கின்றனர். ஒரு 45 வயது மதிக்கத்தக்க நடுத்தர வயது ஆணுக்கும், 20 வயதுடைய இளம் பெண்ணுக்கும் இடையிலான உறவு, காதல் மற்றும் உணர்ச்சிகரமான பிணைப்பைச் சுற்றி இப்படம் நகரும் எனத் தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை உறுதி செய்யும் வகையில் இப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. அதில் சூர்யாவை காதலிக்கும் பெண்ணாக மமிதா வருகிறார். வயது காரணமாக தயங்கும் சூர்யா தயங்க, அதனை ஏற்ம மறுக்கும் பெண்ணாக நடித்துள்ளார் மமிதா. இந்த படத்தை பார்க்கையில் வாரணம் ஆயிரம்’, ‘சில்லுனு ஒரு காதல்’ காலத்து சூர்யாவை மீண்டும் கண்முன் நிறுத்துவதாக தோன்றுகிறது. நிச்சயம் சூர்யா ரசிகர்களுக்கு இப்படம் ஒரு தீனியாக மையும் என்பது டீஸரை பார்க்கையில் தெரிகிறது.