Connect with us

எனக்கு போட்ட பாட்ட ரஜினிக்கு கொடுத்துட்டாரு!… இளையராஜா மீது கோபப்பட்ட பாக்யராஜ்!..

bhagyaraj

latest news

எனக்கு போட்ட பாட்ட ரஜினிக்கு கொடுத்துட்டாரு!… இளையராஜா மீது கோபப்பட்ட பாக்யராஜ்!..

திரைத்துறையில் இளையராஜாவை பகைத்துக் கொண்ட சிலரில் பாக்யராஜ் முக்கியமானவர். அது என்னவோ!.. துவக்கத்திலிருந்தே அவர்கள் இருவருக்கும் இடையே செட் ஆகவில்லை.. பாரதிராஜாவிடம் பாக்யராஜ் உதவி இயக்குனராக பணிபுரிந்த போது பாடல் தொடர்பான பணிக்கு பாரதிராஜா பாக்யராஜை அனுப்பிய போது அதற்காக கோபப்பட்டவர் இளையராஜா. ஒருகட்டத்தில் பாக்யராஜ் இயக்குனராகி வெற்றிகளை கொடுக்க அவரின் திரைப்படங்களுக்கு இளையராஜா இசையமைத்தார்..

ஆனால், இளையராஜா நடந்துகொள்ளும் விதம் பாக்யராஜுக்கு பிடிக்கவில்லை.. எனவே ஒரு படத்தில் அவரின் தம்பி கங்கை அமரனை இசையமைக்க வைத்தார். இது இளையராஜாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அடுத்த படத்திற்கு பாக்கியராஜ் இளையராஜாவை அணுகிய போது ‘அதான் கங்கை அமரன் இருக்கானே. அவனிடமே போங்க’ என்று சொல்லிவிட்டார் இளையராஜா. அதனால்தான் பாக்யராஜ் இயக்கிய சில படங்களுக்கு இளையராஜா இசை அமைக்கவில்லை.. மாறாக சந்திரபோஸ் உள்ளிட்ட சிலர் இசையமைத்தனர்..

ஒருகட்டத்தில் ‘இளையராஜா இல்லையென்றால் பாட்டு போட முடியாதா?.. நானே இசையமைக்கிறேன்’ என சொல்லி இசையைக் கற்றுக் கொண்டு தான் இயக்கிய 5 படங்களுக்கு பாக்யராஜே இசையமைத்தார். இந்நிலையில், இளையராஜா கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் பேசிய பாக்யராஜ் ‘நான் என்ன கேட்கிறானோ அதற்கு 110 சதவீதம் எனக்கு பாடல்களை கொடுத்து விடுவார் இளையராஜா. அதேநேரம் எனக்காக போட்ட இரண்டு பாடல்களை அவர் ரஜினிக்கு கொடுத்து விட்டார்..

ராசுக்குட்டி படத்திற்கு பாடல்கள் உருவாக்கியபோது மேலும், இரண்டு பாடல்களை கொடுத்தார் இளையராஜா. அதை படத்தில் வைக்க இடமில்லை என்பதால்.. இந்த 2 பாடல்களையும் யாருக்கும் கொடுத்து விடாதீர்கள்.. அடுத்த படத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என அவரிடம் சொல்லியிருந்தேன்.
ஒருநாள் ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு சென்றபோது அந்த பாடல் பாடிக்கொண்டிருந்தது.. அதுதான் எஜமான் படத்தில் இடம்பெற்ற ‘ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்’ என்கிற பாடல். அதேபோல் அந்த படத்தில் வந்த ‘நிலவே முகம் காட்டு’ என்கிற பாடலும் இளையராஜா எனக்காக் உருவாக்கியது. அனால், அதையும், எஜமான் படத்திற்கு கொடுத்துவிட்டார்..

அந்த இரண்டு பாடல்களையும் பொள்ளாச்சியில் உள்ள எனது தோட்டத்தில் நானும் இளையராஜாவும் உருவாக்கினோம் எனவே எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது.. எப்படி கொடுத்தார் என்று எனக்கு தெரியவில்லை என்றார் பாகியராஜ். அதற்கு அருகிலிருந்த இளையராஜா ‘இதில் என்ன ஆச்சரியப்பட வேண்டியிருக்கு.. அந்த இரண்டு பாடல்களையும் அவர்களுக்கு கொடுத்து விட்டேன்’ என்று சொல்லி சிரித்தார்.

To Top