---Advertisement---

2K மற்றும் Gen Z கிட்ஸ்களை வெகுவாகக் கவரும் ஹேப்பி ராஜ் டிரைலர்

Published on: March 17, 2026
happy raj movie trailer
---Advertisement---

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ஹேப்பி ராஜ். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் உடன் கௌரி பிரியா நாயகியாக நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் 11 ஆண்டுகள் கழித்து நடிகர் அப்பாஸ் இப்படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இப்படத்தினை மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கியுள்ளார். இவர் பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

ஹேப்பி ராஜ் முழுக்க முழுக்க இளைஞர்களை கவரும் வகையில் ரொமண்டிக் காமெடி ஜானரில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஹேப்பி ராஜ்’ படத்தின் ட்ரெய்லர் இன்று. நடிகர் தனுஷ் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டார்

வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையில், காதல், காமெடி மற்றும் குடும்ப உணர்வுகள் கலந்த ஒரு முழுமையான ‘ஃபீல் குட்’ திரைப்படமாக ஹேப்பி ராஜ் உருவாகியுள்ளது என்பதை இந்த ட்ரெய்லர் காட்டுகிறது. குறிப்பாக தனது குரு நாதர் பிரதீப் ரங்கநாதன் ஸ்டைலில் இப்படத்தை எடுத்துள்ளார் இயக்குனர்.

வழக்கமான தனது கதாபாத்திரங்களில் இருந்து விலகி, இதில் மிகவும் எனர்ஜியான மற்றும் ஃபன்கியான (Funk) லுக்கில் ஜி.வி. பிரகாஷ் அசத்தியுள்ளார். காதலுக்கும் குடும்பத்திற்கும் இடையே சிக்கித் தவிக்கும் ஒரு துள்ளலான இளைஞராக அவரது நடிப்பு ட்ரெய்லரில் கவனம் ஈர்க்கிறது.

அப்பாஸ் இப்படத்தில் நாயகியின் அப்பா வேடத்தில் நடித்துள்ளார். குறிப்பாக 2K மற்றும் Gen Z கிட்ஸ்களை வெகுவாகக் கவரும் என எதிர்பார்க்கப்படும் இந்த ‘ஹேப்பி ராஜ்’ வருகிற மார்ச் 27-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.