நடிகர் அஜித்குமார் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி அவ்வப்போது கார் ரேஸ்களிலும் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார்.. அதுவும் கடந்த இரண்டு வருடங்களாக அஜித் தொடர்ந்து கார் ரேஸ் போட்டியில் கலந்து கொண்டு வருகிறார். குட் பேட் அக்லி படத்திற்கு பின் இதுவரை அஜித் எந்த படத்திலும் நடிக்கவில்லை. குட் பேட் அக்லி படம் சூப்பர்ஹிட் அடித்ததால் அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனும் இயக்குகிறார் என சொல்லப்பட்டது. ஆதிக் ரவிச்சந்திரனும் அதை உறுதி செய்தார்..
ஆனால் அஜித் 185 கோடி சம்பளம் கேட்டதால் அந்த படத்தை தயாரிக்க எந்த தயாரிப்பாளரும் முன்வரவில்லை. இறுதியாக மும்பையை சேர்ந்த ஒரு தயாரிப்பாளரை சம்மதிக்க வைத்ததாக செய்திகள் வெளியானது. இந்நிலையில்தான், இப்போது ஒரு டிவிஸ்ட் வந்திருக்கிறது.
சமீபத்தில் சிறுத்தை சிவா அஜித்தை சந்தித்திருக்கிறார்.
அப்போது, கங்குவா படத்திற்கு பின் என்னை யாரும் மதிப்பதில்லை. என்னிடம் கதை கேட்க எந்த நடிகரும் முன்வருவதில்லை. ரஜினி சாரை சந்தித்து பேசினேன். ‘பெரிய ஹீரோவை வைத்து படம் பண்ணுங்கள்’ என சொல்லி அனுப்பிவிட்டார். விஜய் சேதுபதியிடம் பேசினேன். முழுக்கதையையும் கொடுங்கள். படித்துவிட்டு சொல்கிறேன்’ என்கிறார் என புலம்பியிருக்கிறார்.
இதைக்கேட்டு அப்செட் ஆன அஜித் ‘என்னுடைய அடுத்த படத்துக்கு நீங்கதான் இயக்குனர்’ என சொல்லிவிட்டதாக செய்திகள் கசிந்திருக்கிறது. எனவே, அஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு சிறுத்தை சிவாவுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்துக்காக ஆதிக் ரவிச்சந்திரன் ஒரு வருடமாக காத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





