---Advertisement---

இப்படி வம்பு வளர்த்தால் யாருதான் ஓட்டு போடுவாங்க? – தவெகவினரை வெளுத்து வாங்கிய பிரபல இயக்குநர்

Published on: March 18, 2026
vijay with pravin gandhi
---Advertisement---

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். கட்சி துவங்கிய போது இருந்த அந்த வரவேற்பு தற்போது மக்களிடையே இல்லை என்றே கூறப்படுகிறது. காரணம் விஜய் நடந்துகொள்ளும் விதம் குறிப்பாக எந்த ஒரு விசயத்திற்கும் வாய் திறப்பதே இல்லை என்ற குற்றசாட்டு, அவர்து மனிவி விசாக்ரத்து, திரிஷாவுடன் திருமணத்திற்கு சென்றது என அனைத்தும் அவருக்கு எதிராகவே திரும்பியது. போதாக்குறைக்கு அவரது கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகளும் அடங்கும்.

சமீபத்தில் தவெக கட்சியின் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனாவின் ரஜினி குறித்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அனைத்துக் கட்சியினரும் இதனை எதிர்த்தனர்.

இந்நிலையில், தவெக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் சமீபத்திய செயல்பாடுகள் குறித்து ரட்சகன்’, ‘ஜோடி’ மற்றும் ஸ்டார் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் பிரவீன் காந்தி கடுமையான விமர்சித்துள்ளார். அவர் கூறியபோது,

தவெகவினர் ஏற்கனவே ஆளும் கட்சியான திமுகவையும், பிரதான எதிர்கட்சியான அதிமுகவையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதேபோல, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடமும் மோதலில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி அஜித் ரசிகர்களைச் சீண்டி வந்த தவெகவினர், தற்போது ரஜினிகாந்த் ரசிகர்களையும் வம்புக்கு இழுத்து வருவது ஆரோக்கியமான போக்கு அல்ல. விஜய்க்கு வெளியில் இருப்பவர்களை விட, அவர் கூடவே இருக்கும் நபர்கள்தான் அதிக தீங்கு விளைவிக்கிறார்கள் எனக் கூறினார்.மேலும் இப்படி ஒருவரையும் விட்டுவைக்காமல் எல்லோரிடமும் வம்பு வளர்த்தால், வரும் தேர்தலில் தவெகவிற்கு யாருதான் ஓட்டு போடுவார்கள்?” என்று பிரவீன் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.