தமிழ் பிரபலங்களுக்கு சமீபகாலமாகவே விவாகரத்து அதிகரித்து வரும் நிலையில் பிரபல சின்னத்திரை நடிகை அனுப்பிய விவாகரத்து நோட்டீஸ் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
விஜய் தொலைக்காட்சியில் சின்ன மருமகள் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. பெரிய அளவில் டிஆர்பி இல்லை எனக் கூறப்பட்டாலும் அதற்கென ரசிகர்கள் இருந்து வருகின்றனர். சீரியல் வைரல் இல்லை என்றாலும் இதன் ஹீரோயின் ஸ்வேதாவின் விஷயம் இன்னமும் புகைந்து கொண்டு தான் இருக்கிறது.
இவர் முதலில் இன்ஸ்டாகிராமில் காதல் ரீல்ஸ் போட்டு வந்தார். வீட்டில் ரொமான்ஸ், ப்ளைட்டில் காதல் பரிசு என பலருக்கும் காதலர் முகத்தை காட்டாமலே வெளியிட்ட வீடியோக்கள் வைரல். அவர் யார் என பலருக்கும் ஆர்வம் அதிகமானது.
ஆனால் நான் யாரிடமும் இப்போது காட்ட மாட்டேன் என்றார். ஆனால் சின்ன மருமகள் சீரியலில் ஸ்வேதா நல்ல வரவேற்பை பெற திடீரென அந்த ரீல்ஸை நீக்கி விட்டார். திடீரென ஒருவர் பேட்டிகளில் வந்து நான் தான் ஸ்வேதா கணவர் என பல திடுக்கிடும் தகவல்களை கூறினார்.

ஆனால் நடிகை எனக்கு அவரை தெரியாது. அவரை நான் பார்த்ததே இல்லை எனக் கூறி இருந்தார். இதையடுத்து, ஸ்வேதா கணவர் எனக் கூறிப்படும் நபர் தற்போது என்னை ஸ்வேதா தெரியாது எனக் கூறினார். பின்னர் எதற்கு எனக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.
தெரியாத ஆளுக்கு தான் விவாகரத்து தருவார்களா எனக் கேள்வி எழுப்பி இருக்கிறார். நானும் என் மீது தப்புதான். மனைவி என்னைக்காது மீண்டும் என்னை தேடி வருவார் என்று தான் நான் அமைதியாக இருந்தேன். ஆனால் இப்போ இது மோசமாக போகிறது.





