---Advertisement---

பல நடிகர்களை பின்னுக்கு தள்ளிய துரந்தர் 2: தி ரிவென்ஜ் : முதல் நாள் வசூல் நிலவரம்

Published on: March 20, 2026
Dhurandhar 2
---Advertisement---

ரன்வீர் சிங் நடிப்பில் நேற்று வெளியான படம் ‘துரந்தர் 2: தி ரிவென்ஜ். மிகவும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படத்டின் முதல்நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

படம் வெளியான முதல் நாளில் நாடு முழுவதும் சுமார் 21,728 காட்சிகளில் திரையிடப்பட்டு, ஒரே நாளில் ரூ 102.55 கோடி நிகர வசூலை ஈட்டி பிரம்மாண்டமான தொடக்கத்தைப் பதிவு செய்துள்ளது. படம் வெளீயானதற்கு முந்தைய நாள் திரையிடப்பட்ட பிரிமியர் ஷோவின் மூலம் ரூ43 கோடி வசூல்ல் ஈட்டியிருந்தது. ஆக மொத்த வசூல் 145.55 கோடி ஆகும். இது இந்திய சினிமா உலகில் பல முன்னணி நட்சத்திரங்களின் வசூலை பின்னுக்கு தள்ளியுள்ளது. ஆனால் புஷ்பா படத்தின் வசூலை துரந்தரால் தொடக் கூட முடியவில்லை. புஷ்பா முதல் நாளில் ரூ 164 கோடி வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி, ஷாருக்கானின் ‘ஜவான்’ பிரபாஸ் நடித்த சலார் மற்றும் கல்கி போன்ற படங்களின் முதல் நாள் வசூலை பின்னுகும் தள்ளியுள்ளது துரந்தர். தொட்ரந்து விடுமுறை நாட்கள் வருவதால் வரும் நாட்களில் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.