திரைத்துறையில் விஜயகாந்த் – இப்ராஹிம் ராவுத்தர் போல நட்பை பார்க்கவே முடியாது. அவர்களிடையே இருந்த நட்பு அவ்வளவு புரிதலோடு இருந்தது.. அதனால்தான் அவர்களை இருவரும் ஒன்றாக பல வருடங்கள் பயணித்தார்கள். இருவருமே மதுரை சேர்ந்தவர்கள்.. சிறு வயது முதலே நண்பர்கள்.. விஜயகாந்த் நடிகனாக வேண்டும் என முடிவெடுத்து சென்னை வந்த போது கதாசிரியராக வேண்டும் என்கிற ஆர்வத்தில் அவருடனே வந்தவர்தான் இப்ராஹிம் ராவுத்தர்.
ஆனால் ஒரு கட்டத்தில் விஜயகாந்துக்கு எல்லாமுமாக ராவுத்தர் மாறினார். விஜயகாந்த் நடிக்கும் படங்களுக்கு கதைகளை கேட்பது, இயக்குனரை முடிவு செய்வது, சம்பளத்தை முடிவு செய்வது என்கிற எல்லா வேலைகளையும் இப்ராஹிம் பார்த்துக்கொண்டார். ராவுத்தர் சொல்லிவிட்டால் மறுபேச்சு பேசாமல் விஜயகாந்த் கேட்பார்..
இதுதான் அவர்களின் நட்பின் சாராம்சம். அதேபோல் விஜயகாந்தை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்வார் ராவுத்தர். படிப்படியாக சினிமாவில் வளர்த்தது ஆக்ஷன் ஹீரோவாக மாறியது, அப்படியே அவரை அரசியலுக்கு தயார்படுத்தியது என விஜயகாந்தின் முக்கிய வளர்ச்சிக்கு ராவுத்தர் காரணமாக இருந்தார்.

ஆனால் ஒருகட்டத்தில் அவர்களுக்கிடையே இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். இந்நிலையில்தான் சமீபத்தில் ஊடகம் என்று பேசிய தயாரிப்பாளர் காஜா மொய்தீன் ஒரு முக்கிய தகவலை பகிர்ந்து கொண்டார். விஜயகாந்த் – ராவுத்தர் போல ஒரு நட்பை நான் சினிமாவில் யாரிடமும் பார்த்ததில்லை.. விஜயகாந்த் சார் தனது திருணம் தொடர்பாக ஒரு முடிவை எடுத்தார்.
ஆனால், அதில் ராவுத்தருக்கு விருப்பமில்லை.. வேண்டாம் என தடுத்தார். விஜயகாந்த் கேட்கவில்லை. உடனே ராவுத்தர் தரையில் படுத்து ‘என்னை தாண்டி நீ போடா’ என்றார்.. அவ்வளவுதான்.. விஜயகாந்த் எதுவுமே பேசவில்லை.. அப்படியே போய் உட்கார்ந்து விட்டார்.. ‘நீ என்ன சொல்றியோ கேக்குறேன்’ என சொல்லிவிட்டார். அப்படி ஒரு நட்பு அவர்களுடையது’ என்று சொல்லி இருக்கிறார்..
மேலும் சந்தர்ப்ப சூழ்நிலையால் அவர்கள் பிரிந்து விட்டாலும் இருவரும் எங்குமே யாரையுமே விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இப்ராஹிம் ராவுத்தர் இறந்த போது விஜயகாந்த் பல மணி நேரங்கள் அழுது கொண்டே இருந்தார்’ எனவும் காஜா மொய்தீன் கூறியிருக்கிறார்.





