பரத் நடிப்பில் 2019ம் வருடம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற திரைப்படம் காளிதாஸ். இந்த படத்தை ஸ்ரீ செந்தில் என்பவர் இயக்கியிருந்தார். இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக பரத் நடிக்க சஸ்பென்ஸ் கிரைம் திரில்லராக இப்படம் உருவாகியிருந்தது.
தற்போது காளிதாஸ் 2 உருவாகியிருக்கிறது. இந்த திரைப்படத்தையும் ஸ்ரீ செந்திலே இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் பரத், பவானிஸ்ரீ, அஜய் கார்த்தி, அபர்நதி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.. இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி வெளியாகவுள்ளது.
காளிதாஸ் 2 திரைப்படமும் முதல் பாகத்தை போலவே சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் படமாக உருவாகியிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தில் டிரெய்லர் வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது. வழக்கம் போல் ஒரு சைக்கோ கொலைகாரன் கொலைகளை செய்ய அதை பரத் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
இந்த படத்திற்கு சாம் சி.எஸ் பின்னணி இசை அமைத்திருக்கிறார். கண்டிப்பாக காளிதாஸ் 2 திரைப்படம் பரத்துக்கு ஒரு வெற்றி படமாக அமையும் என கணிக்கப்படுகிறது..





