---Advertisement---

சிறகடிக்க ஆசை: சீதாவின் தாலியை திருடிச் சென்ற பெண்…கையும் களவுமாக பிடித்த மீனா… ஆனால்?

Published on: March 22, 2026
Siragadikka Aasai Promo Muthu Meena
---Advertisement---

விஜய் டிவியின் முன்னணி சீரியலான சிறகடிக்க ஆசை நாளுக்கு நாள் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த வாரத்திற்கான புரமோ மற்றும் எபிசோடு அப்டேட்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதில்,

முத்துவின் வாழ்க்கையில் நடக்கும் மற்றொரு நல்ல விஷயம், அவர் புதிதாக ஒரு வேன் வாங்கியிருப்பது. இந்த புதிய வேனுக்கு மீனா மற்றும் முத்துவின் குடும்பத்தினர் அனைவரும் இணைந்து கோலாகலமாக பூஜை செய்கின்றனர். முத்து தன் சொந்த உழைப்பால் முன்னுக்கு வருவது மீனாவுக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கிறது.

கோவிலி சாமி கும்பிட்டு கொண்டிருக்கும் போது திடீரென சீதா தனது தாலியை காணவில்லை என மீனாவிடம் கூற, பதட்டத்துடன் கோவில் வெளியே மீனா வந்து பார்க்க திருடிய பெண் வேகமாக ஓடுகிறாள். உடனடியாக வேகமாக ஓடும் மீனா அந்த பெணை பிடித்து போட்டிருந்த முக்காடை எடுக்க, தனது வீட்டிற்கு சாமியாராக வந்த பெண்தான் சீதாவின் தாலியை திருடியது தெரியவருகிறது.

ஆனால் அந்த பெண் மீனாவை தள்ளிவிட்டு ஓடிவிடுகிறாள். இதையடுத்து கோவிலுக்கு வரும் மீனா, நடந்த சம்பவம் அனைத்தையும் அனைவரிடமும் கூறுகிறார். ஆனால் விஜயா இதனை நம்பவில்லை. அப்படி நான் அழைத்து வந்து அவள் பிராடு என்று நிரூபித்துவிட்டால் என்ன செய்வீர்கள் என விஜயாவிடம் முத்து கேட்க, அப்படி ஒன்று நடந்தால் பார்க்கலாம் என கூறுகிறார் விஜயா. இதன்பின் மீனா எங்கு அந்த பெண்ணை பிடித்தாரோ , அங்கு சென்று அருகில் இருந்த CCTV மூலம் திருடியை கண்டுபிடிக்கிறார் முத்து. இதன்பின் என்ன நடக்க போகிறது என்பதை வரும் வாரங்களில் தெரியவரும்.