தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையிலிருந்து சினிமாவிற்குள் நுழைந்த இவரின் வளர்ச்சி அனைவரையும் வாய்பிளக்கும் அளவிற்கு உள்ளது. நடிகர் விஜய், ரஜினி போலவே தன்னை நினைத்துகொள்ளும் இவர் ரஜினியை போன்றே மற்ற நடிகர்களின் படங்களை பார்ப்பது, உடனடியாக அந்த டீமை அழைத்து பாராட்டுவது என தொடர்ந்து செய்து வருகிறார். விஜய் தற்போது அரசியலுக்கு சென்றுவிட்டதால் அந்த இடத்தை அடைய போட்டி போடுபவரகளில் சிவகார்த்திகேயனும் ஒருவர்.
ஐபிஎல் திருவிழா நெருங்கி வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரீயூனியன் நிகழ்ச்சி நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. எம்.எஸ். தோனி உள்ளிட்ட பல முன்னணி கிரிக்கெட் வீரர்கள் கலந்துகொண்ட இந்த விழாவில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். தோனியின் தீவிர ரசிகரான சிவகார்த்திகேயன் மேடையில் பேசிய வார்த்தைகள் அரங்கத்தையே அதிர வைத்தது.
மேடையில் எம்.எஸ். தோனியைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு பேசிய சிவகார்த்திகேயன், நான் சேப்பாக்கம் மைதானத்தில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிழக்கு கடற்கரைச் சாலையில் வசித்து வருகிறேன். நீங்கள் மைதானத்தில் பேட்டிங் செய்ய களமிறங்கும் போது, இங்கு ரசிகர்கள் எழுப்பும் விசில் சத்தம் எனக்கு அங்கு வரை கேட்கும் என்று மிகவும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார். தோனியின் மீதான அன்பை வெளிப்படுத்த அவர் இப்படிப் பேசியிருந்தாலும், 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு விசில் சத்தம் கேட்குமா? என்ற கேள்வியுடன் இணையத்தில் மீம்ஸ்கள் பறக்கத் தொடங்கின.

இந்த நிலையில் வழக்கமாகவே சிவகார்த்திகேயனை கிண்டல் செய்து வரும் புளுசட்டை மாறன் இதனை விடுவாரா?. தனது என்ஸ் பக்கத்தில்
அமரன் படம் ஓடினாலும் ஓடுச்சு.. அரசியல், இலக்கியம், ஆன்மீகம், வில்லுப்பாட்டு, விளையாட்டுன்னு எந்த பக்கம் போனாலும் திடீர் தளபதி அங்கு சலங்கை கட்டி ஆடுறார். 25 கிலோமீட்டர் அப்பு.. 25 கிலோமீட்டர் என்று பதிவிட்டுள்ளார்.





