தெலுங்கு திரையுலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவ்ர் நடிகர் சர்வானந்த். இவ்ரது நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் பைக்கர். ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் திரைப்படமான இதில் முக்கிய வேடத்தில் இதுதாண்டா போலீஸ் போன்ற திரடி ஆக்சன் படங்களில் நடித்த டாக்டர் ராஜசேகர் நடித்துள்ளார்.
இந்த நிலையில் இந்தியாவின் முதல் மோட்டோகிராஸ் ரேசிங் படமான பைக்கர் படத்தின் டிரைலர் இன்று வெளியானது.
இந்த டிரைலரின் ஆரம்பத்திலேயே, இந்திய பந்தய வீரர்கள் உலகத் தரம் வாய்ந்த திறமையாளர்களுக்கு ஈடு கொடுக்க முடியுமா? என்று ஒரு வெளிநாட்டு ஸ்போர்ட்ஸ் வர்ணனையாளர் கேள்வி எழுப்புவதோடு காட்சிகள் அதிரடியாகத் தொடங்குகின்றன. இதில் ‘விக்கி’ என்ற கதாபாத்திரத்தில் ஒரு வெறித்தனமான மற்றும் பைக் ரேஸராக சர்வானந்த் மிரட்டியுள்ளார்.
டிரைலரில் வெறும் ரேசிங் காட்சிகள் மட்டுமின்றி,செண்டிமெண்டாக தந்தை – மகன் உறவும் முக்கிய பங்கை காட்டுகிறது. இதில் சர்வானந்துக்குத் தந்தையாகவும், மிகவும் கண்டிப்பான பயிற்சியாளராகவும் ராஜசேகர் நடித்துள்ளார். டிரைலரை பார்க்கையில் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்பது தெரிகிறது.
பைக்கரை அபிலாஷ் ரெட்டி இயக்கியுள்ளார். ‘யுவி கிரியேஷன்ஸ்பேனரில் வம்சி கிருஷ்ணா ரெட்டி மற்றும் பிரமோத் ஆகியோர் மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்துள்ளனர். சர்வானந்துக்கு ஜோடியாக நடிகை மாளவிகா நாயர் நடித்துள்ளார். ரன் படத்தில் நடித்த பிரபல நடிகர் அத்துல் குல்கர்னி படத்தில் நெகடிவ் ரோலில் நடித்துள்ளார்.
ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பின்னணி இசை ரேசிங் காட்சிகளின் வேகத்தையும், அதிரடியையும் பார்ப்பவர்களை சீட்டின் நினியில் அமரவைப்பது நிச்சயம். வருகின்ற ஏப்ரல் 3-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உலகமெங்கும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.





