நடிகர் விஜய் திரிஷாவுடன் சென்னையில் ஒரு திருமண விழாவிற்கு சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு சில நாட்களுக்கு முன்புதான் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார். அவர் ளித்த மனுவில் எனது கனவர் வேறு ஒரு நடிகையுடன் திருமணத்தி மீறிய உறவில் உள்ளார் என்றும், அதனை விட்டுவிடும்படி கூறினாலும் மறுக்கிறார் என்றும் கூறியிருந்தார். தேவைபட்டால் அந்த நடிகையின் பெயரை கூறுவேன் என்றும் கூறியிருந்தார். இந்த சூழ் நிலையில் விஜய் திரிஷாவை அழைத்து சென்றது அவரது கட்சிக்காரர்கள் கூட ரசிக்கவில்லை. அவரது அரசியல் செல்வாக்கு கூட இந்த சம்பவத்தால் சிறிது சரிவையும் கண்டுள்ளது என்றே கூறலாம்.
இந்த நிலையில், நடிகர் மற்றும் இயக்குநர் சமுத்திரக்கனி தனது திரையுலக நண்பர்களுடன் இது குறித்துப் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
வீடியோவில் சமுத்திரக்கனி, இது என்ன விளையாட்டா? இவ்வளவு விஷயங்கள் நடந்திருக்கிறது. அவங்களை வெளியே கூட்டிட்டு போகிறீங்க. நான்கு சுவற்றுக்குள்ள வைத்துக் கொள்ள வேண்டியதுதானே? யாரை நீ பழி வாங்குற? எல்லாம் நல்லபடியாக வந்து கொண்டிருந்தது. கட்சிக்காரனே இனிமேல் நம்மால் முடியாது என்று சொல்கிறான் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
முன்னதாக, நடிகர் பார்த்திபன் தன்னைக் குறித்துப் பேசியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திரிஷா, சமுத்திரக்கனியின் இந்த விமர்சனத்தைக் கண்டுகொள்ளாமல் மௌனம் சாதித்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
தற்போது இந்த வீடியோ விவகாரம் தொடர்பாக பேட்டி ஒன்றில் சமுத்திரக்கனி தெளிவாக விளக்கியுள்ளார்.
வீடியோ எடுக்கும் போது எனக்குத் தெரியும். தெரிந்துதான் பேசினேன். அங்கு அந்தத் தம்பி மட்டும்தான் வீடியோ எடுத்தான். உள்ளொன்று வைத்துப் பேசுவதில்லை: எனக்கு மனதில் ஒன்று வைத்துக்கொண்டு வெளியே ஒன்று பேசத் தெரியாது. சந்தோஷமாக இருந்தாலும் சரி, வேதனையாக இருந்தாலும் சரி, அது அப்படியே பிரதிபலித்துக் கொண்டு போய்விட வேண்டும். அந்த வீடியோவுக்கு மானே, தேனே போட்டு நம்ம தம்பிகள் வேறு வேலையைப் பார்த்துவிட்டார்கள். அதை நான் ஒன்றும் குற்றமாக நினைக்கவில்லை. பேசிவிட்டு அதற்காக நான் வருத்தப்படவும் இல்லை. அது ஒரு அக்கறை, ஒரு வலி. என் மனதில் பட்டதைத்தான் நான் பேசுகிறேன் என சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.





