ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட், தினேஷ் ராஜ் மற்றும் கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் சார்பில் ஜி. தனஞ்செயன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் லவ் ஓ லவ். அறிமுக இயக்குனர் மகேஷ் ராஜேந்திரன் இப்படத்தி எழுதி இயக்குகிறார். நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்புகழ் பவிஷ் நாராயண் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக தெலுங்கு யூடியூப் பிரபலம் நாக துர்கா நடிக்கிறார். மேலும் இவர்களுடன் செல்வராகவன், கே.எஸ். ரவிக்குமார் மற்றும் வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படத்திற்கான இசையை ஃபாக்ஸ்என்’ (FOXn) என்ற பிரதீப் பி.ஜே மற்றும் வெய்ன் பேவி இசையமைக்கின்றனர். விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடித்த மதுரை வீர்ர்ன் பட இயக்குனர் பி.ஜி. முத்தையா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி லவ் ஓ லவ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார். இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படமான பாக்கெட் நாவல் படப்பிடிப்புத் தளத்தில் ‘லவ் ஓ லவ்’ படக்குழுவினர் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.





