---Advertisement---

வரலட்சுமி ஹேண்ட்பேக்குகளை விற்றாலே பகுபலி 3 எடுக்கலாம் – நக்கலடித்த கணவர்

Published on: March 28, 2026
varalakshmi with her hunband
---Advertisement---

சிம்பு நடித்த போடா போடி படம் மூலம் அறிமுகம் ஆனவர் வரலட்சுமி சரத்குமார். முதல் படம் வெற்றிபெறவில்லை என்றாலும் அனைவரையும் தனது நடிப்பால் கவனிக்கவைத்தவர் இவர். தொடர்ந்து பல் படங்கள் நடித்தாலும் பாலா இயக்கிய தாரை தப்பட்டை இவரை வேறொரு பரிமாணத்திற்கு கொண்டு சென்றது.


திரையுலகில் பிஸியாக இருக்கும்போதே வரலட்சுமி நிக்கோலய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்தார். இவர்களது திருமண புகைப்படங்களும், ரொமான்ஸ் இணையத்தில் தொடர்ந்து வைரலாகி வரும் நிலையில், தனது மனைவியின் ஹேண்ட்பேக் கலெக்‌ஷன் குறித்தும், தன் குடும்பப் பெண்கள் மீதான அன்பு குறித்தும் நிக்கோலய் அளித்த பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

அவ்ர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஒரு வேளை நான் படம் எடுக்கவேண்டும் என்று முடிவெடுத்து, எனக்கு ஃபைனான்ஸ் கிடைக்கவில்லை என்றால் கவலையே இல்லை. காரணம் வரலட்சுமி வைத்திருக்கும் ஹேண்ட்பேக்குகளில் பாதியை விற்றாலே பாகுபலி 3 திரைப்படத்தையே எடுத்துவிடலாம் என்று நகைச்சுவையாக தெரிவித்தார். மேலும், அவரிடம் சுமார் 9000 ஹேண்ட்பேக்குகள் வரை இருக்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும் என் வாழ்க்கையில் இருக்கும் பெண்களை நான் மிகவும் நேசிக்கிறேன். என் அம்மா, என் மகள் மற்றும் என் மனைவி ஆகிய மூவரும் எனக்கு மிக முக்கியமானவர்கள். அவர்கள் ஏதாவது ஒரு பொருளை ஆசைப்பட்டு கேட்டால், அதைத் தட்டாமல் உடனடியாக மூன்று பொருட்களாக வாங்கிக் கொடுப்பேன் எதற்காக நாம் இவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்கிறோம்? எதற்காகச் சம்பாதிக்கிறோம்? நமக்கு பிடித்தவர்களுக்கு, நம்மை நம்பியிருப்பவர்களுக்குத் தேவையானதை வாங்கிக் கொடுத்து அவர்களை மகிழ்விக்கத்தானே? என்று கூறினார்.

நிக்கின் இந்த பேட்டி சமூகவலைதளங்களில் பலராலும் ரசிக்கப்படுகிறது.