Connect with us

ஜாய் கிரிஸில்டா – ரங்கராஜ் இடையேயான டிஎன்ஏ ரிசல்ட் வெளியானது!! இத எதிர்பாக்கலையே!

latest news

ஜாய் கிரிஸில்டா – ரங்கராஜ் இடையேயான டிஎன்ஏ ரிசல்ட் வெளியானது!! இத எதிர்பாக்கலையே!

Madhampatti Rangaraj: ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா மற்றும் ரங்கராஜ் இடையேயான பரபரப்பு வழக்கில் ஒரு வழியாக முடிவு தெரிந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

நடிகரும், பிரபல சமையல் கலைஞருமாக இருந்து வைரல் ஆனவர் மாதம்பட்டி ரங்கராஜ். லோக்கல் பிரபலம் தொடங்கி பிரபல அரசியல்வாதி வீட்டு விழாக்களில் சமைத்து ஹிட்டடித்தார். இதை தொடர்ந்து அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக அறிமுகமானார். 

அப்போதில் இருந்து அவருடைய ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிஸில்டா இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்களை வெளியிட்டார். ஒரு கட்டத்தில் இருவரின் கல்யாண புகைப்படத்தினை வெளியிடத்தினை பதிவிட்டு தங்கள் வாழ்க்கை அப்டேட்டை பகிரங்கமாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார்.

அடுத்து அவர் கர்ப்பமாக இருப்பதை அறிவித்து இன்னும் பெரிய பரபரப்பை பத்த வைத்தார். ஆனால் மாதம்பட்டி தரப்பு அமைதியாகவே இருந்தது. ஜாய் தொடர்ந்து இருவரும் ஒன்றாக இருக்கும் படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட விஷயம் பூதாகரமானது. மாதம்பட்டி ஜாய் மீது வழக்கு தொடர இருவரும் ஆஜாராகும் நேரத்தில் முதல் மனைவியுடன் வந்து அதிர்ச்சி கொடுத்தார்.

ஜாய் தன்னுடைய குழந்தை மாதம்பட்டிக்கு பிறந்தது எனக் கூற ரங்கராஜ் அதற்கு மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில் டிஎன்ஏவிற்கு தான் தயார் என அவர் டயலாக் விட ஜாய் பெரிய போராட்டத்துக்கு பின்னர் இந்த டெஸ்ட்டை நடத்தி முடித்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் இந்த ரிசல்ட்டில் மாதம்பட்டி ரங்கராஜ் தான் ஜாய் கிறிஸில்டா குழந்தையின் தந்தை என முடிவுகள் வெளியாகி இருக்கிறது. இதை தற்போது நீதிமன்றத்தில் சமர்பித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

இனிமேல் இதற்கு பின் ஜாய் கிறிஸில்டாவிற்கு ஜீவனாம்சம் கொடுக்க நீதிமன்றம் வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரிசல்ட்டுக்கு ரங்கராஜ் என்ன பதில் சொல்வார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 

To Top