---Advertisement---

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Published on: April 4, 2026
---Advertisement---

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல் எபிசோட் தொடங்க இருக்கும் நிலையில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த ஸ்பெஷல் அப்டேட் வெளியாகிவிட்டது. 

இந்த சீசனிலும் முதலில் ரக்‌ஷன் தான் தொகுப்பாளராக வர இருந்த நிலையில் அவர் படங்களில் பிஸியாக இருப்பதால் அவருக்கு பதிலாக OG ஆங்கர் என்ற அடையாளத்துடன் மாகாபா ஆனந்த் கலந்துக்கொண்டு இருக்கிறார். 

டபுள் போட்டியாளர்கள் என்பதால் இந்த முறை தொகுப்பாளரும் ஜோடியாக வந்துள்ளனர். அதற்காக ஐந்தாவது சீசன் போட்டியாளராக இருந்த சோயா வந்து இருக்கிறார். மேலும் நான்காவது நடுவராக ரோஜா களமிறங்கி இருக்கிறார். 

கடந்த சீசன் போல மூன்று நடுவர்களான தாமு, மாதம்பட்டி ரங்கராஜ், கௌஷிக் வந்துள்ளனர். போட்டியாளர்களாக சின்னத்திரை நடிகர்களான சங்கீதா , அரவிந்த் சிஜூ, கிரிக்கெட் வர்ணனையாளரான அனிருத் மற்றும் மாடல் சம்யுக்தா கலந்துள்ளனர். 

காமெடி நடிகையான நிஷா – அவர் கணவர் ரியாஸ் கலந்து கொண்டுள்ளனர். மேலும் பட்டிமன்ற பேச்சாளரான மஞ்சுநாத் ராஜேஸ்வரி மற்றும் சோஷியல் மீடியா பிரபலமான சாந்தா மகேந்திரன்,  டிராவி மற்றும் ராஜி கலந்துக்கொள்ள இருக்கின்றனர்.

இந்த முறை சமையல் டாஸ்குகளும் வித்தியாசமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால் கோமாளிகளில் குரோஷியை தவிர மற்ற எல்லாருமே அதே முகங்கள் தான் என்பதால் காமெடிக்கு யோசிக்க கூட செய்யலாம்.