---Advertisement---

ரஞ்சன் – தி அட்வகேட்: பிரசாந்த் நடிக்கும் அடுத்த பட போஸ்டர் வெளியீடு:

Published on: April 6, 2026
ranjan the advacate
---Advertisement---

தமிழ் சினிமாவில் 90களில் சாக்லெட் பாயாக வலம் வந்தவர் நடிஅக்ர் பிரசாந்த். முதல் படமே சூப்பர் ஹிட். தொடர்ந்து அவர் நடித்த செம்பருத்தி, வண்ண வண்ண பூக்கள், வின்னர், ஜீன்ஸ், ஜோடி என பல வெற்றிபடங்களை கொடுத்தார். உச்சத்திலிருந்த அவரது மார்கெட் திடீரென இறங்கியது. தொடர் தோல்விகள், குடும்ப பிரச்சனைகளால் கேரியரில் கவனம் செலுத்தாமல் இருந்து வந்தார். னீண்ட இடைவெளிக்கு பிறேகு இவர் நடித்து வெளிவந்த அந்தகன் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் பிரசாந்த் நடிக்கும் புதிய படத்தின் போஸ்டரை இன்று வெளியிட்டனர் படக்குழு. பிரசந்தின் பிறந்த நாளையொட்டி அந்த போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது.

கடந்த ஆண்டு தெலுங்கில் பிரியதர்ஷி புள்ளிகொண்டா நடிப்பில் வெளியாகி, விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்ற ‘கோர்ட் – ஸ்டேட் வெர்சஸ் எ நோபடி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் வாங்கியிருந்தார். ‘அந்தகன்’ படத்தைப் போலவே, இந்தப் படத்தையும் தனது மகன் பிரசாந்தை ஹோரோவாக நடிக்க வைத்து தியாகராஜனே இயக்குகிறார். இப்படத்திற்கு ‘ரஞ்சன் – தி அட்வகேட்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் பிரபல நடிகை தேவயானியின் மகள் இனியா ராஜகுமாரன் மற்றும் ‘ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ்’ தயாரிப்பாளர் எஸ். கதிரேசனின் மகன் ஹரி ஆகியோர் முக்கிய வேடங்களில் அறிமுகமாகின்றனர். தேவயானியின் மற்றொரு மகளான பிரியங்காவும் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சாந்தி தியாகராஜன் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.